கிளியோபாட்ரா

ஆசிரியர்: முகில்

Category வாழ்க்கை வரலாறு
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 168
ISBN978-81-8493-582-0
Weight250 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எகிப்தின் மாபெரும் பேரரசியாக, மயக்கும் பேரழகியாக, ஆகச் சிறந்த காதலியாக கிளியோபாட்ராவைக் கொண்டாடும் அதே வரலாறு, அவளை ஆதிக்க வெறி கொண்டவளாக, அகந்தை நிறைந்தவளாக, ஒழுக்கமற்றவளாகவும்கூடச் சித்திரிக்கிறது. அவள் ஆச்சரியங்கள் தீராத நிரந்தரப் புதிர். பண்டைய எகிப்திய வரலாற்றிலும், ரோம் வரலாற்றிலும் கிளியோபாட்ரா, தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருந்திருக்கிறாள். வலிமையான ரோம் பேரரசின் தலைவர்களான ஜூலியஸ் சீஸரையும், மார்க் ஆண்டனியையும் தன் கண்ணசைவில் காலில் விழ வைத்திருக்கிறாள்.. !! அவள் அரவணைப்பில் ஆட்சி மாறியிருக்கிறது. அழுத கண்ணீரில் அரசியல் மூழ்கியிருக்கிறது. கிளியோபாட்ராவின் அழகு முதல், அவள் இருப்பு, மரணம் வரை, ஒவ்வோர் அத்தியாயமும் ஆச்சரியங்களாலும் சர்ச்சைகளாலும் சூழப்பட்டுள்ளது. விவாதங்களின்றி வரலாறு ஏற்றுக்கொண்ட ஒரே விஷயம், ரோம் பேரரசின் பிடியில் எகிப்து இரையாகாமல் தப்பியதற்கு ஒரே காரணம், கிளியோபாட்ரா. பின் இரையானதற்குக் காரணமும் அவளே. முகிலின் இந்தப் புத்தகம், கிளியா, கழுகா என எளிதில் கண்டறிய முடியாத ஒரு வினோதப் பெண்ணின் வாழ்வை நம் கண்முன் நிறுத்துகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
முகில் :

வாழ்க்கை வரலாறு :

கிழக்கு பதிப்பகம் :