குரு வழி
₹145.00 ₹137.75 (5% OFF)

குரு வழி

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 272
Weight200 grams
₹120.00 ₹96.00    You Save ₹24
(20% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்தியாவைத் தவிர உலகத்தின் எந்தப் பகுதியிலேயும் குரு என்கிற விஷயம் பற்றிப் பெரிய சிலாகிப்பு இருக்கிறதா என்ற கேள்வி எனக்குள் உண்டு. இல்லையோ என்ற எண்ணமும் உண்டு.
இந்து மதத் தத்துவத்தில் குரு என்கிற விஷயத்திற்கு மிக மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த குரு ஆச்சார்யன் அல்ல. பாடம் சொல்லிக் கொடுக்கிறவரோ, வித்தை சொல்லிக் கொடுக்கிறவரோ, பழக்கவழக்கங்கள் சொல்லிக் கொடுக்கிறவரோ அல்ல. மதபோதகரும் அல்ல. ஒரு மதத்தின் சட்டதிட்டங்களை ஆசார அனுஷ்டானங்களைச் சொல்லித் தருபவரும் அல்ல.
ஒரு குருவிற்கு தந்தைக்குண்டான ரத்த பாசம் கிடையாது. அவன் என் பிள்ளை . அவன் தவறே செய்யக்கூடாது. தவறு செய்தால் அவனைக் கண்டிப்பதற்குத்தான் நான் இருக்கிறேன் என்ற முரட்டுத்தனம் ஒரு குரு காட்டுவதில்லை.
பிரம்பால் விளாசுவதோ, பேச்சுக்களை வகை தொகை யின்றி வாரி இறைப்பதோ, உணவு உண்ணும்போது தண்டச் சோறு என்று திட்டுவதோ அவருடைய வேலை அல்ல.
ஒரு தாயின் வெகுளித்தனமும் குருவிடம் கிடையாது. என் பிள்ளை என்ன செய்தாலும் என் பிள்ளை தானே.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :