குரு

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 148
Weight150 grams
₹75.00 ₹63.75    You Save ₹11
(15% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



குரு என்கிற மாபெரும் விஷயத்தை சில சம்பவங்களாலும் அதைத் தொடர்ந்து சில சிந்தனைகளாலும் விளக்கவதற்கு முயற்சி செய்திருக்கிறேன். உறவுகளையே புரிந்து கொள்வதிலேயே மிகுந்த சிக்கல்கள் ஏற்படுத்துகிற மனம் குருவைப் புரிந்து கொள்வதில் நாட்டமில்லாமல் பயத்தையே அடிப்படையாகக் கொள்கிறது. பயம் கலந்த பணிவு தான் எல்லாரிடத்திலும் வெளிப்படுத்த வேண்டும் என்று பலா சொல்லித்தர, பயம் கலந்த பணிவை எடுத்துக் கொண்டு கேள்விகளற்று விசாரிப்புகளற்று வயதான ஒரு நபரை பல இளைஞர்கள் பணிந்து ஏற்கின்றார்கள், கொண்டாடுகிறார்கள்
பயம் இருக்குமிடத்தில் தெளிவு இருக்காது. தெளிவு இல்லையெனில் இறை தரிசனம் கிடைக்காது. இறை தரிசனம் நோக்கி ஒருவரின் வாழ்க்கை நகரவில்லையெனில் அவா வாழ்வதும் ஒன்றுதான் வாழாததும் ஒன்று தான்.
'தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி என் கிற வெகு ஜன ஆட்களாகத்தான் அவர்கள் வாழ்க்கை முடிந்து போகும். எவரேனும் எங்கேனும் தெளிவு பெறுவதற்கு இந்தப் புத்தகம் வழி காட்டும் என்ற நம்பிக்கையோடு இதை எழுதியிருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :