குற்றப்பரம்பரை
₹450.00 ₹423.00 (6% OFF)

குற்றப்பரம்பரை

ஆசிரியர்: வேல ராமமூர்த்தி

Category நாவல்கள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaperback
Pages 448
ISBN978-93-8430-104-0
Weight500 grams
₹400.00 ₹376.00    You Save ₹24
(6% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல ஆண்டுகளுக்கு முன் மார்க்வெஸின் ஒரு நூற்றாண்டு தனிமையும் மற்ற லத்தின் அமெரிக்க இலக்கியங்களையும் நான் படித்து பிரமித்திருக்கிறேன். குற்ற பரம்பரை நமக்கு ஒரு நூற்றாண்டு வல்வை நமக்கு உயிரோட்டமாய் உணர்த்துகிறது.

கதை கரு என்பது வெறுமனே வாழ்விலிருந்து மட்டும் பெறபடுவதில்லை வாழ்வியலோடு படைப்பாளியால் பரிசோதிக்கப்பட்டு வாசகனுக்கு தரப்படுகின்ற அம்சமாகும் நூறாண்டுகளுக்கு முன்பு இருந்த வாழ்வின் விசயங்களில் இருந்து கதை கருவை உருவாக்கி வாசகனுக்கு தருவது லேசுபட்ட விசயமல்ல அனுபவப்பட்ட மனிதர்களிடம் இருந்துதான் கதை கரு எடுக்க படுகிறது.

நான் ஒரு மனிதன் மனித தன்மையுள்ள எதையும் எனக்கு தொடர்பற்றதாக கருதவில்லை என்பது கார்ல் மார்க்சுக்கு மிகவும் பிடித்தமான வாசகம். வாழ்வில் காணும் சொற்ப அழகாய் மிகை படுத்தி பேரழகாய் காட்டும் போது அழகியல் வெற்றியடைகிறது.

மேலும் இப்புத்தகத்தில் கிராமிய வாழ்வின் அழகாய் பிரதி பலிப்பதொடு வேலாவின் கலை நின்று விடுவதில்லை அழகை உருவாக்கவும் செய்கிறார் என்பதை ஒவ்வொரு பக்கத்திலு, நம்மால் உணர முடிகிறது. அதிலும் கொடூரமும் மூர்கத்தனமும் நிறைந்த கள்ளர்கள் பற்றிய நாவலில் இதை உருவாக்குவதில் வேலாயுதம் வெற்றி பெற்றுள்ளார்.

பிறந்தது ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி கிராமம், பெற்றோர் வேலுச்சாமித் தேவர் - லஷ்மி அம்மாள். கல்லூரிப் படிப்போடு ராணுவத்துக்குப் போனவர். துப்பாக்கி தூக்கிச் சுடும் போதும் வனங்களின் பூ நோகாமல் குறி வைத்தவர். பிறந்த மண்ணில் சிந்திச் சிதறிக் கிடக்கும் மனுசப்பாடுகளை இலக்கியம் ஆக்கியவர். மண் சார்ந்த, வல்லமைமிக்க, தனித்த ஓர் எழுத்து பாணியை தனதாக்கிய வேல ராமமூர்த்தி, பல்லாயிரம் பேரையும் இமைக்க மறந்து கேட்க வைக்கும் 'மேடைக் கதைசொல்லி', பல்கலைக்கழகப் பாடங்களாகவும் முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுக் களஞ்சியமாகவும் ஆன இவரது கதைகள், அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், ஃபிரெஞ்ச், மலாய், கொரியன் மற்றும் சீன மொழிகளிலும் ஆக்கம் செய்யப்பட்டுள்ளன. பல ஆண்டுகள் இந்திய அஞ்சல் துறைக்குள் அடைபட்டிருந்த இந்த ராணுவக் குதிரை, கட்டுடைத்து வெளியேறி, மதயானையாக.., கொம்பனாக.. பாயும் புலியாக... சேதுபதியாக.. தமிழ் திரைப்படத் துறையில் வலம் வரத் தொடங்கி உள்ளது.

மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்றாசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது. மனிதர்களின் முழு வாழ்க்கையை தலைமுறைகளின் வாழ்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்க முடியும். பல ஆண்டுகளுக்கு முன் மார்க்வெசின் 'ஒரு நூற்றாண்டுத் தனிமையும் மற்ற லத்தீன் அமெரிக்க இலக்கியங்களையும் நான் படித்து பிரமித்திருக்கிறேன். வேல.ராமமூர்த்தியின் "குற்றப் பரம்பரை' நாவல் ஒரு நூறாண்டு வாழ்வை நமக்கு உயிரோட்டமாய் உணர்த்துகிறது.
கதைக் கரு என்பது வெறுமனே வாழ்விலிருந்து மட்டும் பெறப்படுவதில்லை. வாழ்வியலோடு படைப்பாளியால் பரிசோதிக்கப்பட்டு வாசகனுக்குத் தரப்படுகிற அம்சமாகும். நூறாண்டுகளுக்கு முன்பு இருந்த வாழ்வின் விசயங்களிலிருந்து கதைக் கருவை உருவாக்கி வாசகனுக்குத் தருவது லேசுப்பட்ட விசயமல்ல. அனுபவப்பட்ட மனிதர்களிடமிருந்து தான் கதைக்கரு எடுக்கப்படுகிறது. வேல ராமமூர்த்தியின் ம ன ப் ப தி வு க ள் எனும் சே மி ப் ப றை யி ல் முரட்டுத்தனமாகவும், இளக்கமாகவும் உருவாக்கப்பட்ட கரு, மறு உருவாக்கம் செய்யும்படி தூண்டியிருக்கிறது. அதன் விளைவே குற்றப்பரம்பரை நாவல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வேல ராமமூர்த்தி :

நாவல்கள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :