குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது

ஆசிரியர்: அரவிந்தன்

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 136
ISBN978-81-89359-33-9
Weight150 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



அரவிந்தனின் படைப்பு வெளி இறுக்கத்தைத் தூண்டும் மௌனங்களாலும் கலவரமூட்டும் சப்தங்களாலும் நிரப்பப்பட்டது. மௌனத்திலிருந்து சப்தங்களை உருவாக்கும் கதைமொழி வாழ்வின் மர்மமான அடுக்குகளுக்குள் மேற்கொள்ளும் முடிவற்ற பயணமாக வாசிப்பனுபவத்தை உணர வைக்கும் இச்சிறுகதைகளில் தென்படும் எளிமையின் தீவிரம் உக்கிரமானது. வீடு என்னும் வெளி தரும் பாதுகாப்பு பற்றிய கற்பனைகளைக் குழந்தையின் கரங்களைக் கொண்டு அழிக்க முற்படும் . அரவிந்தனின் கதைகள் வாசகரின் பள்ளியறைகளுக்குள் பாம்புகளைத் தவழவிடுகின்றன. வரவேற்பறைகளில் மிருகங்களை நடமாடவிடுகின்றன. கொடுங்கனவுகளால் சூழப்பட்ட யதார்த்தத்தை எதிர்கொள்ளவியலாத திணறலாக வாசிப்பனுபவத்தை மாற்றும் நுட்பமே அரவிந்தனைத் தனித்துவம் மிக்க ஒரு சிறுகதைக் கலைஞராக முன்னிறுத்துகிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
அரவிந்தன் :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :