கைக்கூடைப் பந்தாட்டம்

ஆசிரியர்: லேனா தமிழ்வாணன்

Category விளையாட்டு
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaper Back
Pages 82
₹50.00 ₹42.50    You Save ₹7
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தினம்தினம் மண்ணிலும் விண்ணிலும் எத்தனையோ மாற்றங்கள். ஒவ்வொரு துறையிலும் புதுப்புது கண்டுபிடிப்புகள். ஆனால் இது விளையாட்டுத் துறையில் வெளிப்படவில்லை. இருக்கும் விளையாட்டுக்களில் சிறுசிறு திருத்தங்கள். அதுவே போதும் என்று திருப்திப்பட்டு கொள்கிறார்களோ அல்லது புதுமை விளையாட்டுக்காகப் பலரும் சிந்தித்துச் சிந்தித்து ஒன்றும் கிடைக்காமல் சோர்ந்து விட்டார்களோ என்று தெரியவில்லை.
புதிதாக எதையும் கண்டுபிடிக்கிற அளவுக்கு ஞானம் பெற்றவன் நானில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன் கால்பந்து, கைப்பந்து, கபடி... ஆடியிருக்கிறேன். கால்பந்து கைப்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், கூடைப்பந்து, ஹாக்சி கபடி... போன்ற விளையாட்டுக்களை ரசிப்பேன் அதனால்தானோ என்னவோ என் சிற்றறிவுக்கு இப்படியொரு விளையாட்டுப் பொறி தட்டிவிட்டது.
கைப்பந்தும், கூடைப்பந்தும் கலந்ததிலிருந்து இப்புதிய கைக்கூடை பந்தாட்டம் பிறந்துவிட்டது. இனி இந்த விளையாட்டை ஊர் உலகம் போற்றும்படி வளர்த்து ஆளாக்குவது விளையாட்டு ஆர்வலர்கள் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும் ஆகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
லேனா தமிழ்வாணன் :

விளையாட்டு :

மணிமேகலைப் பிரசுரம் :