கைவல்ய நவநீதம்
ஆசிரியர்:
பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?id=1248-7630-4437-1836
{1248-7630-4437-1836 [{புத்தகம் பற்றி "கைவல்ய நவநீதம்” எனும் நூலின் பெயரை மட்டுமே பெரியோர்கள் சொல்லக் கேள்விப்பட்டுள்ளனே தவிர அந்நூலை என் குருநாதர் பாட்டுச்சித்தர் விளக்கவுரை எழுதிய பின்னரே அந்நூலைப் படிக்கும் பாக்கியத்தை அடைந்தேன். இந்நூலுக்கு முன்னுரை நீயே தரவேண்டும் என என்குரு ஆணையிட்டதால் ஞானப்பாதையில் இளையோன் ஆகிய நான் இந்நூலுக்கு முன்னுரை படைக்கின்றேன்.
<br/>பெரும் ஞானிகளும் அறிஞர்களும் அறிந்த அரிய ஞான நூல் கைவல்ய நவநீதம். வேதாந்தத்தை விளக்கமாகக் கூறும் ஞானத் தமிழ்நூல் இது. இந்நூலிற்கு விளக்கவுரை எழுதுவது எவராலும் எளிதில் இயலாத செயலாகும். அதனை என் குருநாதர் நம் சித்தர் மார்க்த்தில் இருப்பவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்று இந்நூலுக்குப் பாமரரும் உணரும் வண்ணம் எளிமையான விளக்கவுரையுடன் எழுதிப் படைத்துள்ளார். எத்தனை எத்தனையோ ஞானிகளையும் ரிஷி, முனி, சித்தர்களையும் தன் அகத்தே கண்டது இப்புனித பூமியான பாரதம். அதுபோல் அண்ணாமலை கண்ட அற்புத மெய்ஞானியே ஸ்ரீரமண பகவான். இந்நூலில் உள்ள வண்ணமே வாழ்ந்து காட்டிய பிரம்ம சொரூபமான ஸ்ரீரமணர் வாசித்த ஞானநூல் இது என்பதையும் இதன் கருத்துக்களையே தன் சீடர்களுக்கும் போதித்தார் என்பதையும் இந்நூல் படித்தே அறிந்தேன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866