கை விட்ட கொலைக் கடவுள் (எதிர்க்குரல் - 4)

ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன்

Category அரசியல்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 208
ISBN978-93-81828-76-2
Weight200 grams
₹130.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எதிர்கால நாயகனாக ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் மனித உரிமைகள் காவல்துறையின் பூட்ஸ்கால்களால் நசுக்கப்படுவதையும் அதனால் அப்பாவிகள் உயிர் பறிக்கப்படுவதையும், ஆட்சியாளர்களுடன் சேர்ந்திருந்த, இதைச் செய்தவர்களே தாங்கள் கைவிடப்பட்ட தருணத்தில் உண்மைகளை வெளிப்படுத்துவதையும் மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் மனுஷ்ய புத்திரன்.சாதாரண மக்களுக்கு ஆதரவாக அவருடைய குரல் ஒலிக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக அது வலிமை பெறுகிறது. ஆட்டோ கட்டண சீர்திருத்தம், சினிமாவுக்கும் அரசியலுக்குமான தொடர்பு, கல்வியின் இன்றைய நிலைமை என எல்லாவற்றையும் பற்றி அவரது எழுத்துகள் பேசுகின்றன. மனிதநேயமே அவருடைய எழுத்தின் அடித்தளமாக இருக்கிறது.
இன்னமும் விடிவு கிடைக்காத ஈழத்தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு ஆடிக்கொண்டிருக்கும் நாடகத்தைத் தோலுரிக்கிறார். கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையில் அவதூறு வழக்குகளைத் தொடுக்கும் ஜெயலலிதா அரசின் ஜனநாயக விரோதப் போக்குகளைக் கண்டிக்கிறார். அதேநேரத்தில் கருத்து சுதந்திரத்திற்கும் விடுதலை உணர்வுக்குமான போராட்டத்தை விளக்கி, 'மெட்ராஸ்கபே' திரைப்படத்தின் உள்ளடக்கத்தை அம்பலப்படுத்தி விடுதலையின் பக்கம் நிற்கிறார். மோடியை முன்னிறுத்தி நடத்தப்படும் மதவெறி அரசியலுடன் கடுமையான போர் தொடுக்கிறார். கலாச்சாரக் காவலர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்பவர்களின் உண்மை நோக்கத்தை வெளிப்படுத்துகிறார். பெண்களின் உரிமைகள், உழைப்பவரின் உரிமைகள், அறவழிப் போராட்டத்திற்கான உரிமைகள் ஆகியவற்றை அவரது எதிர்க்குரல் வலிமையாக ஒலிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மனுஷ்ய புத்திரன் :

அரசியல் :

நக்கீரன் பதிப்பகம் :