கொங்கணவச் சித்தர் (வாழ்வும் ரகசியமும் )

ஆசிரியர்: ஜெகாதா

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 152
ISBN978-93-82814-21-4
Weight100 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வாதத்தை 'வகார வித்தை' என்று சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள். வகார வித்தை எனும் வாதக்கலை பொய்யென்று சொன்னால் ஞானமும் பொய்தான். ஞானத்தை அடைய வாதமே படிக்கல்லாக அமைகிறது என்பதை பெரும்பாலான சித்தர்களும் குறிப்பிடுகின்றனர்.இரசவாதம் பொய்யென்று சொல்லிவிட்டால் சித்தர் பரம்பரை என்பதும் பொய்தான். அறிவற்றவர்களைப் போல பேசாதீர்கள் என கொங்கணவச் சித்தர் கண்டிக்கிறார்.ஞானத்தின் முத்தி நிலையை அடைய முனைவோர் வாத முறையில் தயாரித்த மருந்தை உண்டால் உடல் சுத்தியாகும். அதன்பின் ஞானத்தை மேற்கொண்டால் சித்தியாகும் என்பதால் இது 'வகார வித்தை' என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டது.
பதினெண் சித்தர்களில் ஒருவராகிய கொங்கணவச் சித்தர் வாழ்வியல் ரகசியமானது பெரும்பாலும் வைத்தியம், வாதம், யோகம், ஞானம் எனும் நான்கையும் இணைத்தும் விரவியும் கொண்ட தன்மையாக இருப்பதைக் காண முடிகிறது.கொங்கணவச் சித்தரைப் பற்றிய அரிய செய்திகளை அனைத்து தலைமுறையினருக்கும் பயன்படும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்நூலை வாசகருக்குக் கொண்டு செல்லும் பணியை சிறப்பாக செய்துள்ள பதிப்பகத்தாருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெகாதா :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

நக்கீரன் பதிப்பகம் :