கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் வரலாறு
ஆசிரியர்:
எ.வி. சுப்பிரமணிய அய்யர்
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+?id=1437-8848-8093-7565
{1437-8848-8093-7565 [{புத்தகம் பற்றி கடந்த நூற்றாண்டின் தமிழ்நாட்டில் தோன்றிய மகான்களில் கோட நல்லூர் சுந்தர சுவாமிகளும் ஒருவர். அவருடைய வாழ்க்கையைப் பற்றிய செய்தி களை, துல்லியமாய், கால நிர்ணயத்துடன் தெரிய முடியவில்லை . அவர் எழுதியதாகக் கடிதங்களோ, அவருடைய சுற்றுப்பிராயணங்கள், சொற் பொழிவுகள் ஆகியவற்றைப் பற்றி அக்காலத்துப் பத்திரிகைச் செய்திகளோ அறிக்கைகளோ கிடைக்கவில்லை. அவருடைய ஏராளமான சீடர்கள் வாய்மொழியாய்ப் பரப்பியதின் மூலம்தான் மக்களுக்கு சுவாமிகளின் வாழ்க்கை விபரங்களை ஓரளவு தெரியமுடிந்தது!
<br/>இதன் அடிப்படையில், இந்த நூற்றாண்டில் சுந்தர சுவாமிகளின் வாழ்க்கையைப் பற்றி, சில சிறு நூல்கள் வெளி வந்திருக்கின்றன. அவற்றில், வாய்மொழியாய் மக்களிடம் பரவி வந்த விபரங்கள் அநேகமாக ஒரே மாதிரியாகவே கூறப்பெற்றிருக்கின்றன. அவர் செய்த தாகக் கருதப்பெற்ற பல அபூத அற்புதச் செயல்களும் அவ்வாறே ஒரே மாதிரியாகக் கொடுக்கப்பட்டிருக் கின்றன. சமீபத்தில் 1969-ல் சுவாமி ராமானந்த பாரதி (பூர்வாஸ்ரமத்தில் கே.ஆர்.ஆர். சாஸ்திரி, வழக் குரைஞர்) ஆங்கிலத்தில் ஒரு நூலை எழுதினார். அதன் தமிழாக்கம் சென்ற வருடம் வெளி வந்தது. இவரும் முன் நூல்களையே பின்பற்றி எழுதியிருக்கிறார். நூல் சிறியதாய் இருந்தபோதிலும், அதில் சில புதிய விஷயங்களும் விளக்கங்களும் காணப்பெறுகின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866