சக்கரவாளக்கோட்டம்

ஆசிரியர்: குணா

Category தமிழ்த் தேசியம்
Publication தமிழக ஆய்வரண்
FormatPaper back
Pages 62
Weight100 grams
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஊழிக்காற்றுக்கு காணலா வேலி? ஆழிப் பெருஞ் சீற்றத்தை அம்மியும் குழவியுமா தடுத்து நிறுத்தும்? ஆன்மாவின் தாகத்தை அடக்குமுறையா வெல்லும்?தாயின் கருவறையும் நாற்சுவர்தான். உயிர் முகிழ்வது அங்குதான்! கல்லறையும் நாற்சுவர்தான். சடலம் அடங்குவது அங்குதான் சிறைச்சாலைஅடக்குமுறை என்பது யாருக்குக் கருவறை - யாருக்குக் கல்லறை - என்பதை வரலாறு பலமுறைசுட்டியுள்ளது. இப்போதும் அது சுட்டும்.சிறையில் முகிழ்ந்த பல முத்துக்களுள் ஒரு முத்துத் தான் இந்தச் சக்கரவாளக்கோட்டம் என்னும் நூல்.கடல்கொண்ட பூம்புகாரில் அமைந்திருந்து இக்கோட்டம், தமிழரின் வானியல் ஆய்வுகளை வடித்தெடுத்த மாடம் என்று வரலாற்றை மீட்டெடுத்துமெய்ப்பிக்கிறார் அறிஞர் குணா!

ஈராயிரம் ஆண்டுகள் தமிழினம் தவமிருந்து பெற்ற பிள்ளை என்று ஈழத்து எல்லாளனை அறிஞர் குணா சுட்டுவார். ஆனால் இந்த அறிஞரும் தமிழ்த்தாயின் மற்றொரு தவப்பிள்ளை என்பதைத் தமிழுலகம் நன்கு அறியும். அவரது நுட்பமான அறிவாற்றலில் விளைந்த நூல்கள் சில மண்ணுரிமை அரசியலுக்கு அடித்தளமிட் டுள்ளன. வள்ளுவத்தின் வீழ்ச்சி என்கிற நூலில் பண்டைத் தமிழரின் அணுவியல் கோட்பாட்டையும் வானியல் ஆய்வுகளையும் மட்டுமல்லாமல், அவைகளே பிற்கால பிற ஆய்வு களுக்கு அடித்தளமிட்டன என்று மெய்ப்பிப்பார்மண்ணுரிமை முதற்பகுதியில் அடுக்கடுக்கான சான்று களைக் காட்டி ஆரிய-திராவிடக் கோட்பாட்டைச் சுக்குநூறாக உடைத்தெறிந்து தமிழரின் உண்மை வரலாற்றை மீட்டெடுக்கும் திருப்பணிக்கு அச்சாரமிட்டுள்ளார்

உங்கள் கருத்துக்களை பகிர :
குணா :

தமிழ்த் தேசியம் :

தமிழக ஆய்வரண் :