சங்ககாலச் சிறப்பு பெயர்கள்
ஆசிரியர்:
டாக்டர் மொ.அ.துரைஅரங்கசாமி
விலை ரூ.130
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1892-2412-5998-0933
{1892-2412-5998-0933 [{புத்தகம் பற்றி இயற்பெயர்கள் தனிச்சிறப்புடையவை. சமய நூல் வல்லார்க்கு, அவை உணர்ச்சி அலைகளை எழுப்பவல்லன. வரலாறும் இலக்கியமும் பயில்வார்க்கும் அவை இன்றியமையாச்சிறப்பினவாயும், சுவையூட்டு வனவாயும் இலங்குவன. வற்றாத பல்பொருட் சுவைக்களஞ்சியமாக அவை அமைந்திருத்தலை, ஸர். எள்நஸ்ட் வீக்லி (SirEanest Weekley) முதலிய அறிஞர்கள் உலகிற்கு உணர்த்தியுள்ளார்கள். அவர்கள் எழுதி உதவியுள்ள நூல்களைக் கண்ணுங் கருத்துமாய்ப் பயின்ற பயிற்சியே, தமிழுலகில் வழங்கும் இயற்பெயர்களை ஆராயுமாறு எம்மைத் தூண்டியது.
<br/>சங்க காலத்தைத் தொடக்கமாகக் கொண்டு இயற்பெயர்களையெல்லாம் தொகுக்க முற்பட்டபோது, அவை எல்லைகோல முடியாது பல்கியது கண்டு, இடைக்காலச் சோழர் காலம் வரையில் வழங்கி வந்துள்ள இயற்பெயர்கள் வரையில் முதலில் ஆராய முற்பட்டோம். பல்வேறு கோணங்களில் நின்று விரிவாகவும் விளக்கமாகவும் இவ்வியற் பெயர்களைக் குறித்து எழுதமுற்பட்டபோது, அந்த கால எல்லையையும் மிகமிகச் சுருக்கவேண்டி வந்தது. தொகுக்கப் பெற்றவை எண்ணற்றவையாயும், பல்வேறு வகைப்பட்டவையாயும், ஒப்புயர்வற்றவையாயும் இருந்தமையால், எம் விருப்பத் திற்குப் பெரிதும் மாறாகச் சங்ககாலச் சிறப்புப் பெயர்கள் மட்டில், அவற்றுள்ளும் இலக்கியச் சிறப்புப் பெயர்கள் - குடிச்சிறப்புப் பெயர்கள் மட்டில் நிறுத்திக் கொண்டு ஆராய்வான் துணிந்தோம். இவைபோக, எஞ்சி நிற்பவற்றை, வாய்ப்பிருப்பின், பின்னர் ஆராய்வான் கருதியுள்ளோம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866