சங்கீத விழாக்கள்

ஆசிரியர்: அமரர் கல்கி

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 144
Weight150 grams
₹60.00 ₹51.00    You Save ₹9
(15% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



1941-ஆம் வருஷத்தில் கேட்டை மூட்டை, செவ்வாய்க் கிழமை எல்லாம் சங்கீத விழாவுக்குச் சேர்ந்து கொண்டன. ரங்கூனில் ஜப்பான் குண்டு போட்டது. செம்மங்குடியும் முசிரியும் கச்சேரி செய்ய முடியாமற் போனது. ஸ்ரீ கே.வி. கிருஷ்ணசாமி ஐயரின் தமையனார் காலஞ் சென்றதின் காரணமாக அவர் சங்கீத விழாவில் அதிக கவனம் செலுத்தாமலிருந்தது - இவை எல்லாம் சேர்ந்து சங்கீத மகாநாட்டில் வழக்கமான உற்சாகம் இல்லாமல் அடித்து விட்டன.
வருஷா வருஷம் மகாநாட்டின் திறப்பு விழா அன்று எள்ளுப்போட்டால் எள்ளு விழாதபடி ஜனங்கள் கூடியிருப்பது வழக்கம். இந்த வருஷத்தில் காலி நாற்காலிகள்தான் அதிகம் காணப்பட்டன. 'குரூப்' போட்டோ எடுத்த இடத்தில் மட்டும் வழக்கம்போல் கூட்டம் காணப்பட்டது குறிப்பிடத் தக்கது!
உலகத்தில் யுத்தக் கப்பல்கள் -வியாபாரக் கப்பல்களுக்கெல்லாம் எவ்வளவோ ஆபத்துக்கள் விளைந்து கொண்டிருந்தாலும், கர்நாடக சங்கீதக் கப்பலுக்கு மட்டும் எந்த வித அபாயமும் இல்லையென்பதற்கு அறிகுறியாக மகாநாட்டைச் சிரமப்பட்டுத் திறந்துவைத்த பிட்டாபுரம் மகாராஜாவுக்கு சங்கீத வித்வத் சபையார் ஒரு வெள்ளிக் கப்பலைப் பரிசளித்ததும் பாராட்டத் தக்கதாயிருந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அமரர் கல்கி :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :