சத்ரபதியின் மைந்தன்

ஆசிரியர்: இரா.நக்கீரன்

Category சினிமா, இசை
Publication விகடன் பிரசுரம்
Pages N/A
₹50.00 ₹45.00    You Save ₹5
(10% OFF)

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்தியாவை இந்து நாடாக மாற்றவேண்டும் என்று கனவு கண்டவர் சத்ரபதி சிவாஜி. ஒரு சிப்பாயின் மகனான இவர், தனது சர்வ வல்லமையால் மகாராஷ்டிரத்தின் மாமன்னனாக உருவெடுத்தார். வீரதீரத்தோடு மகாராஷ்டிரத்தையே ஓர் இந்து சாம்ராஜ்யமாக மாற்றிக் காட்டினார். தன்னை எதிர்த்து வந்தவரையெல்லாம் புறமுதுகிட்டு ஓடச்செய்தார். தான் வாழ்ந்த காலத்தில் தன்னைவிட படையிலும் வீரத்திலும் பலம் குறையாத ஒளரங்கசீப்பை எதிர்த்த துணிச்சல்காரர் மாமன்னர் சத்ரபதி சிவாஜி.
சத்ரபதி சிவாஜியின் மைந்தன் சாம்பாஜி. பிறப்பால் வீரனின் மகனாகப் பிறந்து, ஓர் ஒப்பற்ற வீரனாகவே வளர்ந்தார் சாம்பாஜி. ஆனால், வாலிபத்தில் தந்தையை எதிர்த்துக்கொண்டு மொகலாயருடன் சேர்ந்து, தந்தையின் மரணத்தறுவாயில்கூட உடன் இல்லாத ஒரு துரதிர்ஷ்ட மகனாகிப் போனார். தந்தைக்குப் பிறகு நாடாளவேண்டிய சாம்பாஜி மது, மாது என்று சுற்றித்திரிந்து கூடா நட்போடு சல்லாப வாழ்க்கையில் மூழ்கினார்.
அதேநேரத்தில், சாம்பாஜியின் சிற்றன்னையும் அவரது சகோதரரும் இணைந்து செய்த சூழ்ச்சியாலும் சாம்பாஜி பல இன்னல்களைச் சந்தித்தார். வீரனாக இருந்தாலும் கேளிக்கையில் மட்டுமே அதிக நேரத்தைச் செலவிட்டு, மக்களுக்கு சேவ

உங்கள் கருத்துக்களை பகிர :
சினிமா, இசை :

விகடன் பிரசுரம் :