சந்திரசேகரம்

ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன்

Category ஆன்மிகம்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 312
Weight150 grams
₹235.00 ₹211.50    You Save ₹23
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நண்பர் இந்திரா வியந்தும் சிலிர்த்தும் கரைந்து விடவில்லை. மாறாக, ஒரு எழுத்தாளனுக்கேயான கேள்விகளும், தார்மிக எண்ணமும், தேடலுமாக பெரியவரின் அருளுரைகளில் பிரவேசித்திருக்கிறார். அந்தக் கேள்விகள் நமக்குள்ளேயும் உள்ளவைதான். அந்தத் தேடல் நம்மிலும் இருப்பதுதான். அந்தத் தார்மிக எண்ணம் நாமும் உணர்வதுதான். ஆனால், அவற்றை ஒரு முகமாகக் குவித்து பதிலைத் தேடி அலைந்திருக்க மாட்டோம். மழை நேர இரவில் மின்னும் மின்னலைப் போல, அவை நம்முள் மின்னி மறைந்திருக்கும். ஆனால், இந்திராவுக்குள் அது மின்னிக்கொண்டே இருக்கிறது. அவற்றை இழை இழையாகக் கோத்து மின்னலாடையாக நெய்திருக்கிறார். அதுதான், ‘சந்திரசேகரம்'.
கல்கி குழுமத்தின் தீபம் ஆன்மிக இதழில் இரண்டு ஆண்டுகள் வெளிவந்த தொடர் இது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தொடர் வருவது புதிதல்ல;தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் எழுதுவது இந்திராவுக்கும் புதிதல்ல. ஆனால், அவர் எடுத்துக்கொண்ட பொருள் புதிது. பெரியவரால் நிகழ்த்தப்பட்ட அற்புதங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் அவரின் அருளுரைகளில் இருந்து முத்துக் கோர்க்க ஆரம்பித்தாரே அது புதிது; பெரிது! இந்த சந்திரசேகரம். தவத்தையே வாழ்வாக்கிக் கொண்ட அந்த ஜகத்குரு அமுத மழையாய் வர்ஷித்த ஞானத்துளிகளை சேகரித்து வைத்த வார்த்தைக் கிண்ணம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இந்திரா சௌந்தர்ராஜன் :

ஆன்மிகம் :

விசா பப்ளிகேசன்ஸ் :