சமுதாய வீதி

ஆசிரியர்: நா.பார்த்தசாரதி

Category நாவல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 184
Weight250 grams
₹100.00 ₹94.00    You Save ₹6
(6% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866“மாதவி! சமூகத்தின் நீண்ட வீதிகளில் எங்கும் பயப்படாமல் நடக்க வேண்டுமானால், பெண் இப்படி ஒரு பாதுகாப்பான கட்டிலிலிருந்துதான் கீழே இறங்கி நடக்க முடியும் என்பது பல்லாயிரம் தலைமுறைகளுக்கு முன்பே முடிவாகிவிட்ட விஷயம். சமுதாய வீதியில் நிரந்தரமாக இராவணர்கள் இன்னும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்."
"அப்துல்லாவைச் சொல்றீங்களா?" "அப்துல்லா, கோபால், எல்லோரும்தான்! ஒருத்தருக் கொருத்தர் போட்டி போட்டுக்கிட்டு நடிக்கிறாங்களே!
அவள் பதில் சொல்லாமல் அவன் நெஞ்சில் சாய்ந்தாள். தன்னுடைய சொந்தக்கட்டிலில் உறங்குவது போன்ற சுகத்தை அந்த நெஞ்சு அவளுக்களித்தது. பெண் உறங்குவதற்கு இப்படி ஒரு கட்டிலும் இப்படி ஒரு துணையும் வேண்டுமென்பது ஆண்மக்களில் முதல் இராவணன் தோன்றியபோதே உலகில் முடிவாகிவிட்டது. இராவணன்கள் இருக்கிறவரை அவள் சமூகத்தின் புழுதி படிந்த வீதிகளில் துணையின்றித் தனியாக நடக்கவே முடியாதோ என்னவோ?"

உங்கள் கருத்துக்களை பகிர :
நா.பார்த்தசாரதி :

நாவல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :