சமூக அறிஞர்களின் வாசகங்கள்

ஆசிரியர்: ஏற்காடு இளங்கோ

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper Back
Pages 96
Weight100 grams
₹75.00 ₹71.25    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பழங்காலத்தில் தோன்றிய பல தத்துவங்கள் மன்னர்களைப் பாதுகாப்பதாகவும், ஆளும் வர்க்கத்தைப் பாதுகாப்பதாகவும் உள்ளன. சிலருடைய தத்துவங்கள் மக்களை எழுச்சி அடையும்படி செய்தன. அக்காலப் பழக்கத்தில் இருந்த மூடநம்பிக்கைக்கு எதிராக இளைஞர்களைச் சிந்திக்கத் தூண்டிய சாக்ரடீஸிற்கு விஷம் கொடுத்துக் கொலை செய்தனர். மாற்றம் வேண்டும், மக்கள் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக தலைவர்கள் பலர் தங்கள் வாழ்நாளை மக்களுக்காக வாழ்ந்தனர். தங்கள் நாட்டின் சுதந்திரத்திற்காகவும், தொழிலாளி வர்க்கத்திற்காகவும் பாடுபட்டவர்கள் ஏராளம். அதுதவிர உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் உரிமைகளைப் பெற்று நலமாக வாழ வேண்டும் எனப் போராடிய, புரட்சி செய்த தலைவர்களும் உள்ளனர். சமூகத்தை மாற்றப் போராடிய தலைவர்களைச் சமூக விஞ்ஞானிகள் என்று அழைக்கலாம். இப்படி சமூக மாற்றத்திற்காகப் பாடுபட்ட தலைவர்கள் பலரின் வாழ்க்கையோடு, அவர்கள் சமூகத்திற்கு விட்டுச் சென்ற பிரபலமான வாசகங்களை அடிப்படையாகக் கொண்டு இப்புத்தகத்தை எழுதியுள்ளேன். மாணவர்கள் மத்தியில் இப்புத்தகம் நல்ல சிந்தனைகளை வளர்க்கும் என்று நம்புகிறேன்.

- ஏற்காடு இளங்கோ.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏற்காடு இளங்கோ :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :