சாயங்கால மேகங்கள்

ஆசிரியர்: நா.பார்த்தசாரதி

Category நாவல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 192
Weight200 grams
₹140.00 ₹119.00    You Save ₹21
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'சாயங்கால மேகங்கள்' என்ற இந்நாவலின் கதா பாத்திரங்கள் நம்மைச் சுற்றி நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அங்கும் இங்குமாகக் காண்பவர்களே. சிலரை அடிக்கடி காண்பீர்கள், மற்றும் சிலரை எப்போதாகிலும் அபூர்வமாகக் காண்பீர்கள். பூமியைப் போன்ற ஒரு சமூகப் பொறுப்புள்ள ஆட்டோ ரிக்ஷா டிரைவரை உடனே உங்களருகே பார்த்து விட முடியாதுதான்.
'நமது சமகாலத்து வாழ்க்கையின் அவலங்களை மிகவும் தத்ரூபமாகச் சித்தரித்திருக்கிறீர்கள்' என்றே ஏராளமான வாசகர்களும் இதைப் பத்திரிகையில் படித்தபோது சிறப்பாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள்.
அறியாமையும் சுயநலமும் பதவி - பணத்தாசைகளும் நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பேயாகப் பிடித்து ஆட்டுவதால் நாமும் அதனால் பாதிக்கப்படுவதிலிருந்து தப்ப முடியவில்லை .
கதையில் அவர்கள் போராடுகிறார்கள். வாழ்வில் நாம் போராடுகிறோம். வித்தியாசம் அதுவே. ! சமூகத் தீமைகளைப் பொறுத்துக் கொண்டு பயந்து அடங்கி ஒடுங்கி வாழும் காலம் மலையேறிவிட்டது. இனி அவற்றைத் துணிந்து மனத்தாலும் உடலாலும் எதிர்த்துத்தான் ஆக வேண்டும். மனத்தாலும் - முடியாதபோது-உடலாலும் எதிர்ப்பதற்கான உருவகமாகவே 'பூமி' இந்தக் கதையில் வருகிறான். பூமியைப் போன்று உடல்வலிமை - மனவலிமை இரண்டும் உள்ள இளைஞர்கள் இன்றைய சமூகத்துக்குத் தேவை. ஏனெனில் இன்றைய சமூகத்தில் கோழைகள் வாழ முடியாது. தீரர்களே வாழமுடியும்.

நா. பார்த்த சாரதி.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா.பார்த்தசாரதி :

நாவல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :