சாஸ்திரம் கூறும் அறிவுரைகள்

ஆசிரியர்: த.பன்னீர்செல்வம்

Category ஜோதிடம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaper back
Pages 144
ISBN81-8446-769-9
Weight150 grams
₹75.00 ₹67.50    You Save ₹7
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஒரு மனிதன் பிறந்தது முதல், பள்ளிக்குச் சென்று வித்தை பயின்று, திருமணம் புரிந்து, காதல் விளையாடி, குழந்தையைப் பெற்று, செல்வம் தேடி ஆன்மீகப் பாதையில் சென்று மறுமையடையும் வரை அவன் அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகளையும், செய்யக் கூடாதவற்றையும் கூறி இருக்கிறார்கள். இப்படிச் செய், இப்படிச் செய்யாதே என்று ஆணித்தரமாக நமக்கு அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள் என்றால் தமது அனுபவத்தையும் சேர்த்தே அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். "மூத்தோர் சொல் கேள்" என்பது ஒளவையின் வாக்கு. எனவே நமது முன்னோர்களின் அறிவுரை நமக்கு சிறந்த வழிகாட்டியாகும். இவற்றையெல்லாம் சேகரித்து ஒரு வழிகாட்டி நூல் செய்து கொடுக்க வேண்டும் என்று எனக்கு நிறைய நாட்களாக ஆசை உண்டு. அதைச் செய்து முடிக்க இப்பொழுதுதான் ஈசன் அருள் கிட்டியுள்ளது.
இந்த நூலில் உள்ளவை அனைத்தும் இந்துமதத்தின் பொக்கிஷங்களான, புராணங்கள், உபநிஷத்துக்கள், ஜோதிட நூல்கள், நீதி நூல்கள், இவற்றிலிருந்து சேகரித்து கொடுக்கப்பட்டவையாகும். எல்லா மதத்தினரும், இந்நூலினை வாங்கிப் பயனடையலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
த.பன்னீர்செல்வம் :

ஜோதிடம் :

விஜயா பதிப்பகம் :