சித்தம் அழகியார்

ஆசிரியர்: சுகி சிவம்

Category ஆன்மிகம்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 184
ISBN978-81-8345-679-1
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



என்னுரை என்று தலைப்பிட்டு புத்தகத்திற்கு முன்னுரை எழுதுவது என் வழக்கம்.
ஆனால் இந்தப் புத்தகத்திற்கு அவ்வாறு எழுத என்னால் இயலவில்லை. கூச்சமடைந்தேன். காரணம் இதுதான்.ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் என்ன வேறுபாடு என்று நான் யோசித்தபோது ஒரு வரி மின்னலிட்டது. எனதுரை தனதுரையாக அஞ்ஞானியும் தனதுரை எனதுரையாக ஞானியும் வாழ்நாள் முழுவதையும் செலவிடுகிறார்கள். என் நினைப்பை நிறைவேற்றும் நபராகக் கடவுளை அறிதல் அஞ்ஞானம். அகங்காரத்தின் வாழ்வியல். இறைவன் தன் நினைப்பை தன் நினைப்பாக உணர்தல் ஞானம். நானற்ற நானின் வாழ்வியல். தனதுரை எனதுரை என்று வாழ்ந்த மகான்கள் மகனீயர்கள், சூஃபி, ஜென், நாயன்மார்கள், ஆழ்வார்கள், பலர் பற்றிய மலர்க்குவியலாகவே இந்தப் புத்தகம் நறுமணம் வீசுகிறது. எனவே என்னுரை என்னும் முன்னுரை அகங்கார நெடியாகி பிழையாகி விடும். உலகெங்கும் ஒளி விளக்கேற்றிய மகாணுபவர்கள் மலரடிகளுக்குக் கோடி கோடி வணக்கங்கள்.அன்பினிய சுகி. சிவம்

என் நினைப்பை நிறைவேற்றும் நபராக கடவுளை அறிதல் அஞ்ஞானம். இறைவன் தன் நினைப்பை தன் நினைப்பாக உணர்தல் ஞானம். நானற்ற நானின் வாழ்வியல் தனதுரை எனதுரை என்று வாழ்ந்த மகான்கள். மகனீயர்கள், சூஃபி, ஜென், நாயன்மார்கள், ஆழ்வார்கள் பலர் பற்றிய மலர்க்குவியலாகவே இந்தப் புத்தகம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுகி சிவம் :

ஆன்மிகம் :

கவிதா பதிப்பகம் :