சித்தர்கள் போற்றும் வாலை

ஆசிரியர்: பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி

Category ஆன்மிகம்
Publication ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
Formatpaper back
Pages 288
ISBN978-81-935039-1-1
Weight350 grams
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅன்புடையீர்! அடியேன் சித்தர் நூல் வரிசையில் எழுதி வெளியிடும் பதினொன்றாவது நூலாக “சித்தர்கள் போற்றும் வாலை” எனும் இந்நூல் அன்னையின் அருளால் ஆக்கப்பட்டு வெளிவருகின்றது. அடியேனை தடுத்தாட்க் கொண்டு ஆன்மிகப் பாதையில் அழைத்து வந்தவன் என் குருநாதன் ஐயப்பன். அவனே என் காதில் காயத்ரி மந்திரம் உபதேசித்து அன்னையை வணங்குமாறு உத்தரவிட்டான். அவன் சொல்லிய வண்ணமே அன்னையின் புகழை பாடியும் அவள் மந்திரத்தை ஓதியும் அன்னையைப் போற்றி வந்தேன். அன்னையும் அடியவனை ஏற்று அவள் ஆலயவிழாவில் அருளாளர்களால் சக்திதாசன் என்னும் பட்டமளித்து ஆசீர்வதித்தாள். அன்றிலிருந்து என் பெயரோடு ஓம்சக்தி சேர்ந்துகொண்டது. பின் அன்னையின் திருக்கோயில் திருப்பணியை செய்து முடிக்க என் ஐயன் ஆணையிட்டான். பனிரெண்டு வருட காலம் அயராது பாடுபட்டு அவள் ஆலய கும்பாபிஷேகத்தை அவளருளால் செய்து முடித்தேன். இக்கால கட்டத்தில் தான் ஸ்ரீ காகபுசுண்டரே என் வீட்டிற்கு வந்து யோகத்தைக் காட்டிக் கொடுத்தார். அந்த யோக சாதனையிலும் பனிரெண்டு ஆண்டுகள் சிரத்தையுடன் இருந்து பாட்டுச்சித்தர் எனப்பேர் பெற்றேன். ஞான நிலையில் அடியேனை நிலைநிறுத்தி வாலையின் திருவடியை மெய்ப்பொருள் என தொட்டுக்காட்டி என் குருநாதனே உபதேசித்தான். ஆதலால் அன்னை மாணிக்க நாச்சியார் ஆலயத்தில் என் ஐயனுக்கு அழகான கோயில் கட்டி கும்பாபிஷேகம் முடித்தேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி :

ஆன்மிகம் :

ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை :