சித்தர்கள் வழிகாட்டும் வாசி யோகம்
ஆசிரியர்:
பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=1446-2867-3053-0646
{1446-2867-3053-0646 [{புத்தகம் பற்றி குருபிரம்மா குருவிஷ்ணு குருதேவோ மகேஸ்வர குருசாட்சாத் பரப்ரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ!

-சித்தர்கள் களிவை தந்து குத்தும் என்

த்தும் சையும் சிந்தி என்ற

அடியேனின் கோடானகோடி நமஸ்காரங்களை என்குரு பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாரயணசாமி அவர்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். இந்த "சித்தர்கள் வழிகாட்டும் வாசியோகம் " என்ற இந்நூல் ஓரு ஆன்மிகத்தெளிவை தந்து அவரவரையும் சிந்திக்கவைத்து ஆன்மிகத்தில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இதுவரை இம்மாதிரி ஒரு ஆன்மிக நூலை நாம் கண்டதில்லை என்ற உண்மையை இந்நூல் வாங்கி வாசிக்கும் அன்பர்கள் அனைவரும் நிச்சயம் உணர்வார்கள். ஆன்மிகத்தில் நீடித்து நிலையாய் விளங்கி சிறக்க வரும் இந்நூலிற்கு முன்னுரை எழுதுவதற்கு என்னைத் தேர்ந்தெடுத்ததை பெரும் பாக்கியமாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன். இதை என்னை எழுதச் செய்வதற்கான காரணமும் என் குருமட்டுமே அறிவார் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு அடியேன் இதை எழுதுகின்றேன். மேலும் இதை அடியேன் எழுதவில்லை என்றும் என்னுள் இருக்கும் குருநாதன் எழுதுகிறான் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.

பணம், பொருள், புகழ் தேடி அலையும் இந்த காலத்தில் ஓரு குருவைத் தேடி அலைவது ஒயிலாகி விட்டது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உண்மையை அறியாத சில மனிதர்கள் குருவேடம் அணிகின்றனர். அதைக்கொண்டு பல பேர் தன்னை அறியாது அவர்களிடம் சிந்திக்கும் திறனை இழந்து அடிமைகளாய் ஆகின்றனர். இம்மாயையை விலக்க தன்னை அறிய வேண்டும் என்ற ஆர்வங்கொண்டு உண்மையை தேடும் உறுதியான சாதகராய் நாம் இருந்தால் மெய் குருவே நம்மைத் தேர்ந்தெடுப்பார்.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866