சிந்துவெளியில் முந்து தமிழ்

ஆசிரியர்: பூர்ணசந்திர ஜீவா

Category வரலாறு
Publication யாழிசைப் பதிப்பகம்
FormatPaper Back
Pages 352
ISBN978-81-942791-0-5
Weight400 grams
₹380.00 ₹361.00    You Save ₹19
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சிந்து நாகரிக எழுத்து, மற்றும் தமிழகத் தொல்லியல் சார்ந்த கருத்தாய்வாளர், சிந்து எழுத்து தமிழ்மொழியின் ஒரு தொன்மையான எழுத்து வடிவம் என்று உணர்த்தியவர், சிந்து எழுத்தை வெறும் பட எழுத்தே என்று கூறிக் கொண்டிருந்த நிலையை மாற்றி, சிந்து எழுத்து பெரிதும் ஒலி நிலையான அடிப்படை வடிவங்களுடன், படவுருக்கள், எண்கள், குறியீடுகள் அடங்கிய சொல் வடிவங்களையும் கொண்டதோர் ஒருங்கிணைந்த எழுத்துமுறை என்று நிறுவியவர். சிந்து எழுத்து முழுவதும் சொல்லுருவன் மற்றும் கருத்துருவன் முறையால் மட்டுமே அமைந்த எழுத்துமுறை அல்ல என்றும் நிறுவியவர்.
மேலும், கூட்டுவடிவங்கள் ஓவியப் படவுருக்கள் அல்ல, அவை, அடிப்படை வடிவங்கள் கூடியமைந்த கூட்டெழுத்துகளே என்று தெளிவுபடுத்தியவர். எனவே, சிந்துத் தமிழெழுத்து உலக ஒலி நிலை எழுத்துகளுக்கெல்லாம் தாய் என்று இந்நூல் காட்டுகிறது. சிந்து எழுத்தை அதன் படிநிலை வளர்ச்சியான சங்க காலத் தமிழி எழுத்து வடிவங்களால் ஒலியூட்டலாம் என்று, தமிழி எழுத்து வடிவங்களையே சிந்து எழுத்தின் உரோசட்டாக் கல்வெட்டாக மாற்றியவர், நாகை. பா. ஜீவா என்று பலராலும் அறியப்படும் பூரணசந்திர ஜீவா, இவர் மேல் நிலைப்பள்ளியிலும் - கல்லூரியிலும் பணியாற்றிய தமிழாசிரியர். மகாவித்வான், உரை வளம், ச. தண்டபாணி தேசிகர் ஐயாவின் மாணவர் பிறந்தது 23.02 1947, நாகப்பட்டினம் - தஞ்சைத் தரணி.
தமது இலக்கு தமிழின் மொழி - பண்பாட்டுத் தொன்மையை கி.மு.10,000 என்று நிறுவுவதும், தமது செம்மொழிச் சிந்து தமிழாய்வு அறக்கட்டளை மூலம் இந்திய நாகரிகம், தமிழ்ச் சிந்து நாகரிகம் என்று உலகறியச் செய்வதும் என்று வாழ்பவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிந்து எழுத்தாய்வு தொல்லியல் ஆய்வுகளை மட்டுமே மேற்கொண்டுள்ளார். இந்நூல் தமிழ் வரலாற்றில் ஒரு புதிய முயற்சி என்பதில் ஐயமில்லை.



உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

யாழிசைப் பதிப்பகம் :