சிறுதானிய சமையல்

ஆசிரியர்: அபிராமி

Category சமையல்
Publication சரண் புக்ஸ்
FormatPaperback
Pages 96
Weight150 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஸ்பெஷல் குதிரைவாலி ஃபிரைடு ரைஸ்,

செய்முறை: குதிரைவாலியை அரை மணி நேரம் ஊற விடவும். அகலமான பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்கும்போது, ஊறவைத்து வடித்த குதிரைவாலியை சேர்த்து கொதிக்கவிடவும். அரிசி வெந்ததும் தண்ணீரை வடித்து சாதத்தை ஆறவிடவும். சின்ன வெங்காயம், பூண்டு, கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், குடைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். பச்சைப் பட்டாணியை தனியாக வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பட்டை, கிராம்பு வதக்கி பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் வெங்காயம் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், சிட்டிகையளவு உப்பு போட்டு பாதியளவு வதங்கியதும் . முட்டைக்கோஸ் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி வேகவைத்து ஆறவைத்த குதிரைவாலி சாதம், மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறி இறக்கி சூடாக பரிமாறவும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமையல் :

சரண் புக்ஸ் :