சிலப்பதிகாரம் (தெளிவுரை )

ஆசிரியர்: புலியூர்க்கேசிகன்

Category இலக்கியம்
Publication உமா பதிப்பகம்
FormatPaper Back
Pages 496
Weight200 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சிலம்பு தமிழின் ஒளிர்மணி விளக்கம். தமிழரின் தனிப் பெருஞ்செல்வம். நெஞ்சை அள்ளும் சுவையுடையது. தேனிலே சேர்ந்திழைத்தாற் போன்ற தீஞ்சொல்லால், சீர்மையுடன், இனிமையுடன், எளிமையுடன், செறிவுடன் அமைந்தது. தமிழகத்தின் எம்மருங்கும், யாவராலும் விரும்பிப் போற்றிக் கொள்ளப்படும் ஒப்பற்ற உயர்தனிக் காப்பியம்! சிலம்பிலே, உள்ளத்தை வயப்படுத்தும் கதையமைப்பு உள்ளது. உள்ளத்தோடு ஒன்றிக் கலந்துவிடும் உயிர்ப்புள்ள கதைமாந்தர் உலவுகின்றனர். ஏழிசை இனிதாக இயங்குகின்றது. கூத்துக்கள் நிகழ்கின்றன. குரவைகள் ஒலிக்கின்றன. பண்கள் பயின்று வருகின்றன. அரசியல் அறங்கள் செப்பமுடன் அமைந்துள்ளன. அறவொழுக்கங்கள் பேசப்படுகின்றன. மக்களின் பல்வேறு தரத்தினரையும் நிலையினரையும் கொள்கையினரையும் இனத்தினரையும் தொழிலினைைரயும் காண்கின்றோம். தமிழகத்தின் வளம், தமிழரின் ஒன்று கலந்து வாழும் பண்பு, தமிழ் மக்களின் வாழ்வியல் நெறிகள் எல்லோமே சிலம்பிலே ஒளியிட்டு மிளிர்கின்றன!

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர்க்கேசிகன் :

இலக்கியம் :

உமா பதிப்பகம் :