சி.பி.சிற்றரசு சிந்தனைகள் (தொகுதி-2)
ஆசிரியர்:
சி.பி.சிற்றரசு
விலை ரூ.155
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2%29?id=1221-4692-8648-6042
{1221-4692-8648-6042 [{புத்தகம் பற்றி இந்த சரிந்த சாம்ராஜ்யத்தை ஏற்கெனவே அணுவணுவாக சரிந்து கொண்டுவரும் திராவிடப் பெருங்குடி மக்களுக்கும், அவர்களல்லாத நடுநிலையாளர்களுக்கும் மையத்தில் வைக்கிறோம். இதில் யாரையும் வேண்டுமென்றே தூக்கியும் தாழ்த்தியும் எழுதப்படவில்லை. வரலாறு அன்று முதல் இன்று வரை வளைந்து வளைந்து ஓடிய பரிதாப நிலையைப்படம் பிடித்துக் காட்டியிருக்கிறோம். அழிந்த சாம்ராஜ்யங்களின்மேல் முளைத்திருக்கும் புல்லைத் தின்று பசியாற வரும் கால்நடைகள் போல், அழிந்த சாம்ராஜ்யங்களால் தங்களுக்கென்று விடப்பட்ட மானியத்தால் ஆரியம் எப்படி வளர்ந்தது என்பதை குறிப்பாக சுட்டிக்காட்டுவதும், அவ்வளவு கொடிய ஆரிய நச்சரவத்தின் முன்னால் பரோபகாரத்தால் கைநீட்டிய மண்டலாதிபதிகள் மண்ணைக் கௌவிய சோக வரலாற்றை சித்தரிப்பதே இந்தச் சரிந்த சாம்ராஜ்யத்தின் குறிக்கோளாகும். நம்முடைய பழைய மன்னர்களின் பிரதாபத்தை பாழடைந்த மண்டபங்களும் பார்த்துச் சிரிக்க வைத்து விட்டானே என்று ஆத்திரப்படுவோர், ஆத்திரத்துக்கு அடிமைப்பட்டு அறிவையிழந்து விடுவதைவிட அரசியல் கண்ணோட்டத்தோடு பார்த்து இனி வரும் உலகம் எப்படி இருக்கவேண்டும் என்பதை சித்தரிக்க இந்த நூல் பேருதவியாக இருக்கும் என்பதே என் முழு நோக்கமாகும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866