சீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா
ஆசிரியர்:
பைம்பொழில் மீரான்
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE?id=1414-9886-4523-9685
{1414-9886-4523-9685 [{புத்தகம் பற்றி இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது; தமிழ் சினிமா தனது 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இத்தனை ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் சாதனைகள் பற்றியும், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் போன்றவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பற்றியும் ஏராளமான புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆனால் சினிமா உலகத்தில் நடைபெறும் பின்னணி விஷயங்கள் பற்றி எழுதப்பட்டது மிகக் குறைவு. முன் எப்போதையும்விட பெரும் நெருக்கடியை திரைப்பட உலகம் இப்போது சந்தித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. அவற்றில் வெற்றி பெறும் படங்களை விரல் விட்டு எண்ண வேண்டிய நிலை.அறிமுகம் ஆகும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் எத்தனை பேருக்கு இங்கே பிரகாசமான எதிர்காலம் கிடைத்திருக்கிறது? கோடிகளில் முதலீடு செய்த தயாரிப்பாளர்களில் எத்தனை பேர் லாபம் சம்பாதித்து சந்தோஷம் அடைந்தார்கள்? படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு எத்தனை படங்கள் திருப்தியான பொழுதுபோக்கைத் தந்தன? இப்படி நிறைய கேள்விகள் எழுகின்றன. சினிமாவை வெறும் கலை என ஒதுக்கி உயரத்தில் வைத்துவிட முடியாது! அது ஒரு தொழில். தமிழ் சினிமா ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் புழங்கும் ஒரு உலகம். அது செழிப்பாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.amp;nbsp; அதற்கான வழிகளை இந்த நூலில் அலசுகிறார் பைம்பொழில் மீரான். ‘தினகரன்’ நாளிதழின் சினிமா பத்திரிகையாளராக அனுபவம் சேகரித்திருக்கும் இவர், ‘வண்ணத்திரை’ இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். தமிழ் சினிமாவின் பின்னணி உலகத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் இதை அவசியம் படிக்க வேண்டும்.amp;nbsp;amp;nbsp; amp;nbsp;amp;nbsp;amp;nbsp; amp;nbsp;amp;nbsp;amp;nbsp; amp;nbsp;amp;nbsp;amp;nbsp; amp;nbsp;amp;nbsp;amp;nbsp; amp;nbsp;amp;nbsp;amp;nbsp; amp;nbsp;amp;nbsp;amp;nbsp; amp;nbsp;amp;nbsp;amp;nbsp; amp;nbsp;amp;nbsp;amp;nbsp; amp;nbsp;amp;nbsp;amp;nbsp; amp;nbsp;amp;nbsp;amp;nbsp; amp;nbsp;amp;nbsp;amp;nbsp; amp;nbsp;amp;nbsp;amp;nbsp;amp;nbsp;.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866