சுண்டுவின் சந்நியாசம்

ஆசிரியர்: அமரர் கல்கி

Category கதைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 128
Weight150 grams
₹50.00 ₹42.50    You Save ₹7
(15% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அடுத்த தடவை நான் சுண்டுவைப் பார்த்தபோது, “பணமா! சீ! பணம் இங்கே யாருக்கு வேண்டும்? பணத்தைக் கொண்டு போய் உடைப்பிலே போடு!'' என்றான். நான் திடுக்கிட்டு நிற்கையில், ''பணத்தினால் மனித வர்க்கமே நாசமடைந்து வருகிறது! பணக்காரர்கள் தான் உலகத்தைப் பாழ் பண்ணி வருகிறார்கள்! பணம் சம்பாதிக்கிற எண்ணத்தை நான் விட்டு விட்டேன்!'' என்றான்.
“பின்னே என்ன உத்தேசம் செய்திருக்கிறாய்?" என்று கேட்டேன்.. .
“உலகத்தை உத்தாரணம் செய்யப் போகிறேன். மனித வர்க்கத்தை மகோந்நத நிலைமைக்குக் கொண்டு வரப் போகிறேன்! ஆமாம்; தீர்மானம் செய்து விட்டேன்!” என்றான். “எப்படி!' என்று கேட்டேன். “எப்படியா! சொல்கிறேன், கேள். நான் எழுத்தாளன் ஆகப் போகிறேன். அச்சடித்த எழுத்துக்கு உள்ள சக்தி உலகத்தில் எதற்கும் இல்லை. ஒரு விஷயம் அச்சில் வந்து விட்டதானால், முட்டாள் ஜனங்கள் அது அவ்வளவு அபத்தமானாலும் அப்படியே விழுங்கி விடுகிறார்கள்! இந்த உலகத்தை முன்னுக்குக் கொண்டு வருவதற்கு எழுத்தாளனாவது ஒன்றுதான் சரியான வழி!'' என்றான். “ரொம்ப சந்தோஷம்!” என்றேன். “ஆனால் உன்னை மறந்து விடுவேன் என்று பயப்படாதே! உலகத்தை முன்னுக்குக் கொண்டு வந்தவுடனே உன்னையும் கவனித்துக் கொள்கிறேன்!'' என்று அபயம் அளித்தான்...

உங்கள் கருத்துக்களை பகிர :
அமரர் கல்கி :

கதைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :