சுந்தர காண்டம்

ஆசிரியர்:

Category
Publication பாரதி பதிப்பகம்
Pages N/A
Weight150 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஸ்ரீராமன் என்ற சொல்லுக்குக் கருணை, சத்தியம், வீரம் என்ற பலவிதமான பொருட்களையும் உள்ளடக்கியதாகக் கொண்டு அந்தப் புனித நாமம் திகழ்கிறது.
கருணையே வடிவானவராகவும், சத்தியத்தின் நாயகனகாவும், வீரத்தின் விளை நிலமாகவும் தசரத ராஜ குமாரர் ஸ்ரீராமன் திகழ்ந்ததால் அவருக்கு ஸ்ரீராமன் என்ற திரு நாமம் இடப்பட்டது. ஸ்ரீ ராம மந்திரத்தின் ஸ்தூல வடிவினராக வந்தவர்தான் தசரத ராஜ குமாரன் ஸ்ரீராமன். மகாவிஷ்ணுவின் அவதாரமாகத்திகழும் அந்த ஸ்ரீராமச் சந்திர மூர்த்தியின் பூலோக லீலைகளைப் பற்றிக் குறிப்பிடுவது தான் ஆதிகாவியம் எனப் போற்றப்படும் இராமாயணம் ஆகும்.
இந்தக் காவியத்தை வடமொழியில் எழுதியவர் வால்மீகி முனிவராவார். வால்மீகி முனிவர் வடமொழியில் இயற்றிய இராமாயணத்தைத் தழுவி தமிழ் மொழியில் எழுதியவர் கம்ப நாட்டாழ்வாராவார். கல்வியில் பெரியவர் கம்பர் என்பது தமிழகத்தில் வழங்கிவரும் பழமொழியாகும்.
கம்பர் இயற்றியுள்ள இராமாயணத்தில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம் மற்றும் யுத்த காண்டம் ஆகிய ஆறு காண்டங்கள் மட்டும் உள்ளன. வால்மீகி முனிவர் இயற்றியுள்ள இராமாயணத்தில் உள்ள உத்தர காண்டம் என்ற பகுதியைக் கம்பர் ஏற்றுக் கொள்ளவில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாரதி பதிப்பகம் :