கம்ப சித்திரம் - சுந்தரகாண்டம்
₹170.00 ₹161.50 (5% OFF)
சுந்தர காண்டம்
₹75.00 ₹71.25 (5% OFF)
சுந்தரகாண்டம் படக்கதை
₹70.00 ₹66.50 (5% OFF)
சுந்தர காண்டம்
₹210.00 ₹199.50 (5% OFF)

சுந்தர காண்டம்

ஆசிரியர்: சுகி சிவம்

Category இலக்கியம்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 128
Weight150 grams
₹75.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



வாழ்க்கை முடிவில்லாப் பரிணாமங்களில், கோணங்களில் பரந்து விரிந்த ஒன்று. எண்ணிலடங்கா இரகசியங்கள் நிறைந்தது. எந்த ஒருவர் வாழ்க்கையைப் பூரணமாக அதன் எல்லாப் பரிமாணங்களிலும் வெற்றி கொண்டாரோ அவர் தாமே இரகசிய மயமாக ஆகி விடுகிறார். அப்போது அவர் தனித்தன்மையினால் வாழ்க்கையே அதன் முடிவற்ற எல்லாப் பரிணாமங்களிலும் அழகு நடை போடுகிறது. அப்படிப்பட்ட உத்தமரை நாம் அடையாளம் காணவும், புரிந்து கொள்ளவும் வேண்டுமானால் நாமும் நமது தனித்தன்மையை எல்லாக் கோணங்களிலும் மலரச் செய்ய வேண்டும், உணரச்செய்ய வேண்டும். ஆனால் தனித்தன்மையை முடிவற்ற எல்லாக் கோணங் களிலும் மலரச்செய்வது எவ்வாறு சாத்தியமாகும்? சந்தேகமின்றி -ஒரே வழிதான் நம் தனித்தன்மையை ஒழித்து விடும் போதுதான், அழித்து விடும் போதுதான், பூரணத்தில் கரைந்து மறைந்துவிடும் போதுதான் சாத்தியம். அப்போது தான் நாம் நாமாக இருக்காமல் அந்தமில்லாமல் இருக்கலாம். எல்லைகள் இன்றிப் பரந்து விடமுடியும். கிருஷ்ண பரமாத்மா அப்படிப்பட்ட இரகசியமயமானவர் தாம். அவர் வாழ்க்கையை, ஒவ்வொரு கோணத்திலும், முழுமையாக வென்றவர். அவரது ஒவ்வொரு லீலையும், ஒவ்வொரு பிரகடனமும் வாழ்க்கையின் இந்த மகத்தான சத்தியத்தைச் சொற்களாலோ அல்லது செய்கையினாலோ வெளிப்படுத்தும் புராணமேயன்றி வேறல்ல.வாழ்க்கையின் மகத்தான உண்மைகளையும் இரகசியங் களையும் உலகுக்கு வார்த்தைகளால் எடுத்துச் சொல்வதற்காக, கண்ணன் கூறிய சிறப்பான வாசகங்களின் தொகுப்பே கீதை.

இராமாயணத்தை இலக்கியமாக அனுபவிக்கலாம். அதற்கு இதயம் வேண்டும். அரசியல் வரலாறாக அனுபவிக்கலாம். அதற்கு அறிவு வேண்டும். ஆன்மிக ஞான அனுபவமாகவும் இராமாயணத்தை உணரலாம். அதற்கு ஆத்மாவும் ஆன்மிக எண்ணமும் அவசியம். இந்த நூலை இதயததோடும் , அறிவோடும், ஆத்மாவோடும் நான் அனுபவித்திருக் கிறேன் . அந்த அனுபவத்தையே ஓர் எளிய இனிய நூலாக வழங்குகிறேன். எனவே இலக்கிய வரலாற்று ஆன்மிக அனுபவம் சுந்தர காண்டத்தை ஊன்றிப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும்.

சுந்தர காண்டம்... சொல்வேந்தர் திரு. சுகி. சிவம் அவர்கள் தனக்கே உரிய இனிய, எளிய நடையில் சிறப்பாக படைத் துள்ள' அருமையான நூல். இந்நூலில், "கர்ப்பத்தில் இருக்கும் சிசு, பகவானோடு இணைய முடியும் என்ற பெரு நம்பிக்கையை ஊட்டி ஆத்மாவை அழகுபடுத்தும் காண்டம் சுந்தர காண்டம்'' என்கிறார் ஆசிரியர்.கவிச் சக்கரவர்த்தி கம்பனையும், வான்மீகியையும் ஒருசேர ஆழ்ந்து படித்து, ரசித்து, சுவைத்து அனும் னின் அவதார மகிமையை ஆசிரியர் தனக்கேயுரிய இனிமையான தமிழில் கொடுத்துள்ளது இந்நூலின் தனிச் சிறப்பாகும்.கவிதாவில் தொடர்ந்து படைப்புகளை வெளியிட வாய்ப்பளித்துள்ள சொல்வேந்தர் திரு. சுகி.சிவம் அவர்களுக்கு நன்றி. தமிழ்கூறும் நல்லுலகம் வழக்கம் போல் இந்நூலுக்கும் அமோகஆதரவினை வழங்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுகி சிவம் :

இலக்கியம் :

கவிதா பதிப்பகம் :