சுபமங்களம் தரும் சுந்தர காண்டம் (பாராயணப் பாசுரங்களுடன்)

ஆசிரியர்: கீர்த்தி

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
Formatpaper Back
Pages 96
Weight100 grams
₹35.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்தியாவின் இதிகாசங்களில் முதன்மையானது இராமாயணம். இராமாயணத்தைப் படைத்த வால்மீகி, அதை ஏழு காண்டங்களாகப் பகுத்துக் கூறியுள்ளார். வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி இராமகாதையை உருவாக்கிய கம்பனோ, அதை ஆறு காண்டங்களாகப் பகுத்துள்ளார். வால்மீகி சுந்தர காண்டத்திற்குப் பிறகு, இலங்கை காண்டம் என்றொரு பகுதியைக் கூறியுள்ளார். கம்பனோ , சுந்தர காண்டத்திற்கு பிறகு நேரடியாக யுத்த காண்டத்திற்குச் சென்று விடுகிறார். எப்படியிருந்தாலும் இராமாயணத்தில் நாம் எல்லோரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய பகுதி சுந்தர காண்டம் ஆகும். ஏன்? சுந்தரம் என்றால் என்ன அர்த்தம்? பொதுவாக சுந்தரம் என்ற வார்த்தைக்கு 'அழகு' என்று பொருள். சுந்தர காண்டத்தில் யாருடைய 'அழகு கூறப்படுகிறது? அனுமனின் தாய் அஞ்சனை, தன் மகனை சுந்தரன் என்றே அழைக்கிறாள். சுந்தரகாண்டத்தின் பெரும்பகுதியும் அனுமனின் வீரதீரத்தையே எடுத்துக் கூறுகின்றது. அந்த வகையில் அனுமனுடைய அழகைக் கூறுகிற காண்டம் என்று பொருள் கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :