சூழலியல் புரட்சி

ஆசிரியர்: ஜான் பெல்லமி ஃபாஸ்டர்

Category கட்டுரைகள்
Publication விடியல் பதிப்பகம்
FormatPaperback
Pages 487
ISBN978-81-89867-30-0
Weight650 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அமெரிக்காவிலிருந்து கடந்த ஐம்பது அறுபது, ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் மாத இதழ் 'மன்திலி ரிவ்யூ'. அமெரிக்கப் பல்கலைக்கழகம், ஒன் றி ல் ச மூ க அ றி வி ய ைல க் கற்பித்து க் கொண்டிருப்பவர் 'பெல் ல மி ஃபாஸ்டர்'. நெடுங்காலம், 'மன்திலி ரிவ்யூ'வின் ஆசிரியராக இருந்த பால் எம். சுவீசி-ஐ அடுத்து, ஃபாஸ்டர் அதன் ஆசிரியரானார். சோசலிச (ஒப்புரவு) கருத்துக்களுக்கு அரண் செய்யும் இதழ் அது. அதன் எழுத்தாளர் குழாமும், வாசகர்களும், அறிவியல், பொருளியல், அரசியல், சமூக அறிவியல் சுற்றுச் சூழலியல், சுற்றுச்சூழல் சமூகவியலைக் கற்றுத்துறை போகியோர் ஆவர். இதழாசிரியர் பொறுப்பினை ஏற்ற ஃபாஸ்டர் இவ்வெழுத்தாளர் குழாமுடன் நெருங்கியிருந்து மேற்சொன்ன துறைகளில் ஆழங்கால் படுகிறார். குறிப்பாக, பால் பர்கெட், பிரிட் கிளார்க், பாரிகாமனர் ஆகியோர் ஃபாஸ்டருக்கு மார்க்சியப் பொருளியல், சூழலியல், சுற்றுச் சூழல் சமூகவியல் ஆகியவை குறித்து ஆராய்வதற்குத் தூண்டுதலாய் இருக் கின்றனர். இத்தூண்டுதல்களின் காரணமாகவும், தாமே சமூக அறிவியல் ஆசிரியராய் இருந்ததன் காரண மாகவும், தொடக்கத்தில் கருதுகோள்களாய்த் தாம் கொண்டிருந்தவற்றைப் பின்னர் மார்க்சியக் கருத்தியல் வழி நின்று நிலைநாட்டுகிறார். அத்தோடன்றி, ஆய்வுலகில், 'மார்க்சிய முறையியல்' பாறைபோல் நின்று நிலவுவதை, பிறருடைய ஆய்வுமுடிவுகளைக் கொண்டு உறுதிப்படுத்துகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜான் பெல்லமி ஃபாஸ்டர் :

கட்டுரைகள் :

விடியல் பதிப்பகம் :