செங்கிஸ்கான்
₹200.00 ₹194.00 (3% OFF)

செங்கிஸ்கான்

ஆசிரியர்: முகில்

Category வாழ்க்கை வரலாறு
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaper back
Pages 184
ISBN978-81-8368-865-9
Weight200 grams
₹170.00 ₹164.90    You Save ₹5
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான். சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம், உயிரை உலுக்கும் போர்த்தந்திரங்கள் மட்டுமல்ல. அவரது ஆளுமைத் திறனும்தான். ஒரு சாதாரண மங்கோலிய நாடோடிக் கூட்டத்தில் செங்கிஸ்கான் பிறந்தபோது, மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. செங்கிஸ்கான் ஒரு கனவு கண்டார். சிதறிக் கிடக்கும் இனக் குழுக்களை ஒன்று சேர்க்க வேண்டும். புத்தம் புதிய தேசத்தை உருவாக்கவேண்டும். உலகமே அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் ஒரு மகா பேரரசைக் கட்டியமைக்கவேண்டும். அசாதாரணமான கனவு. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான துடிதுடிப்பும் துணிச்சலும் உத்வேகமும் உக்கிரமும் செங்கிஸ் கானிடம் இருந்தது. கடுமையும் கல்பாறை மனமும் கொண்ட வராகத் தன்னை உருமாற்றிக்கொண்டார். எதிரிகளை அழித் தொழிப்பதற்கான சூத்திரங்களை மட்டுமல்ல, கனவுகளைச் சாத்தியமாக்குவதற்கான கலையையும் செங்கிஸ்கானிடம் இருந்தே கற்றுக்கொண்டது உலகம். செங்கிஸ்கான் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது.


உங்கள் கருத்துக்களை பகிர :
முகில் :

வாழ்க்கை வரலாறு :

கிழக்கு பதிப்பகம் :