செண்பகத்தோட்டம்

ஆசிரியர்: சாண்டில்யன்

Category நாவல்கள்
Publication வானதி பதிப்பகம்
FormatPaper Back
Pages 292
Weight250 grams
₹150.00 ₹120.00    You Save ₹30
(20% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866செண்பகத் தோட்டம் ஒரு சமூகக் கதை. இதை நான் எழுதத் துவங்கியதும் பலபேர் ஆச்சரியப்பட்டார்கள்.
பெரும்பாலும் நான் சரித்திரக் கதைகளையே எழுதி இருப்பதால் எல்லோரும் என்னை 'சரித்திரக் கதாசிரியர்' என்றே அழைத்து வந்திருக்கிறார்கள். பத்திரிகைகளும் இதே பட்டத்தைத்தான் அளித்திருக்கின்றன. சமூகக் கதைகளை நான் எழுதினால் சரியாக இருக்காது என்று திட்டமான அபிப்பிராயமுள்ளவர்களும் உண்டு. ஆகவே, நான் இந்தக் கதையை எழுத ஆரம்பித்ததும் பலர் ஆச்சரியப்பட்டார்கள். 'உங்களுக்கேன் இந்தத் தொல்லை' என்று சிலர் சொல்லவும் சொன்னார்கள்.
இத்தனை எதிர்ப்புகளுக்கிடையே, என்னுடைய பிடிவாத குணத்தால் இந்தச் சமூகக் கதையை எழுத முற்பட்டேன். அப்படி நான் எழுதும் சமூகக் கதையைப் புதுமையான முறையில் அமைக்கவும் தீர்மானித்தேன். கதை எழுதுவது என்ற சாக்கை வைத்துக்கொண்டு தற்காலத் தமிழ்நாட்டின் கிராமங்களை ஆராய்வது என்று முடிவு செய்தேன். அதன் விளைவுதான் செண்பகத் தோட்டம்.'
செண்பகத் தோட்டத்தில் கதையிருப்பதைப் பார்ப்பீர் கள். கதையையும் மீறி கதாபாத்திரங்கள் அதாவது சமூகத் தோழர்கள் உங்கள் கண்முன்னே காட்சி அளிப்பதைப் பார்ப்பீர்கள்.
- சாண்டில்யன்

உங்கள் கருத்துக்களை பகிர :
சாண்டில்யன் :

நாவல்கள் :

வானதி பதிப்பகம் :