செம்பியன் மாதேவி

ஆசிரியர்: ச.செல்வராஜ்

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper Back
Pages 72
ISBN978-81-937563-3-1
Weight100 grams
₹60.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சோழப் பேரரசில் சிறப்புக்குரிய பெண்மணிகளாகப் பேசப்படுபவர் செம்பியன் மாதேவியாரும் குந்தவைப் பிராட்டியாரும் ஆவர். அக்கால சோழ அரசில் அரசியல் பணியாற்றியும் ஆன்மிக பணியாற்றியும் கலைகளை வளர்த்தவர்களாக இருவரும் காணப் படுகின்றனர். செம்பியன் மாதேவியார் இளமையிலேயே கணவனை இழந்து கைம் பெண்ணான நிலையிலும் சோர்ந்து விடாமல் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நற்பணி ஆற்றிய நங்கை. தமது வாழ்நாளில் ஆறு பேரரசர்கள் பரம்பரையைக் கண்டவர். சமயப் பொறை கொண்டவர். பல கற்றளிகள் அமைத்தவர்.
முதலாம் இராசராசனோடு தொடர்புடையவராகப் பேசப்படு பவர் அவனுடைய தமக்கையார் குந்தவைப் பிராட்டியார். இவரும் அரசியலில் பெரும்பணி ஆற்றியவர். ஆன்மிகப் பணிகளை நிறைவாகச் செய்தவர். பல கோயில்கள் கட்டியும் பல கோயில்களைப் புதுப்பித்தும் அரும்பணி ஆற்றியுள்ளார் பலகோயில்களுக்குக் கொடைகளும் வழங்கியுள்ள சமயப் பொறையாளராக இருந்துள்ளார்.
இவர்களுடைய வரலாற்றினைக் கல்வெட்டுச் சான்றுகளுடன் ஆராய்ந்து கண்ட செய்திகளின் தொகுப்பாக அமைந்திருக்கும் நூலே செம்பியன் மாதேவி. இந்த நூலைத் தமிழகத் தொல்லியல் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றிப்பணி நிறைவு பெற்றுள்ள ஆசிரியர் ச.செல்வராஜ் என்பவர் எழுதியுள்ளார். கல் வெட்டுச் செய்திகளையும் கற்சிற்பங்களையும் தொகுத்து ஆராய்ந்து இந்த அரிய நூலைப் படைத்துள்ளார். இதனால் சோழப் பேரரசின் வரலாற்றுப் பக்கங்கள் சில புதுப்பிக்கப் பட்டிருப்பதை அறிந்து மகிழலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :