சேரதாண்டவம்

ஆசிரியர்: பாவேந்தர் பாரதிதாசன்

Category உரைநடை நாடகம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper Back
Pages 128
Weight100 grams
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சேர தாண்டவம்,
இன்றை அரங்கில் என் ஆடல், பழைய வரலாறு தழுவியதாகும். அவ் வரலாறும் என் பாட்டன் நாளில், நாட்டுப்பற்றும் தோள்வலியுமிகுந்த ஒரு போர்மறவனின் போர்த் திறத்தைக் குறித்ததாகும்! ஆடல் துவக்கம் செய்கிறேன்.
சேரன் ஆட்டனத்தி திரையில் மறைகிறான்; அவையினர் வாழ்த்துகின்றனர்!
காட்டுக் குயிலும், கடல் முழக்கமும் ஒத்து இசைத்தாற்போல் கூட்டிசை துவங்குகிறது. சேரன் ஆட்டனத்தி ஆடிவருகின்றான். பின்னிசையும், வரலாறு குறித்துப் பாடும் இன்னிசைத் தமிழும் ஒன்றுபட்டுக் கேட்போர் காதில் இன்பத்தைப் பொழிகின்றன. ஆடுவோனின் ஆடுங் காலடி இயக்கம், முழவு முழக்குவோனின் விரல் இயக்கத்திற்குச் சரிநிகர். அவன் கண்ணும், கருத்தும் வரலாற்றின் கருத்தை எண்பித்துக் கலையின்பத்தை வார்த்தன.
ஆடல், பாடல், அழகு என்னும் அம் மூன்றினின்று, கடலின்மேல் இளஞாயிறு போல் வரலாறு தோன்றுகிறது. பார்ப்போர் பாழுலகை மறந்தனர்; இன்ப உலகில் வாழ்வாராயினர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவேந்தர் பாரதிதாசன் :

உரைநடை நாடகம் :

கௌரா பதிப்பக குழுமம் :