சேரமான் காதலி
ஆசிரியர்:
கவிஞர் கண்ணதாசன்
விலை ரூ.360
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF?id=1973-7374-4860-9714
{1973-7374-4860-9714 [{புத்தகம் பற்றி தமிழகத்தின் மூவேந்தர்களிலே சோழர், பாண்டியர் வரலாறு பற்றிய நாவல்கள் பல வந்துவிட்டன. சேரர் வரலாறு பற்றிய செய்திகள் மட்டும் ஆராய்ச்சிக் குறிப்புக்களாகவே இருந்து வந்தன. அதனை அழகு தமிழில் கற்பனை வளம் சேர்த்துக் கதையாக வடித்துத்தர ஏனோ எழுத்தாளர் ஆர்வம் காட்டியதில்லை. இக்குறையை நீக்கித் தமிழ் மக்களின் மனத்தில் இப்போது நிறைவை ஏற்படுத்திவிட்டார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.
<br/> கவிஞரின் கவிதைகளிலே சொக்கிப் போயிருக்கிறோம். அவரது கட்டுரைகளிலே கர்வங் கொண்டிருக்கிறோம். அவரது கதைகள் நம்மைக் கண்கலங்க வைத்திருக்கின்றன. அவரது சமூக நாவல்கள் நம் சிந்தைனைக்கு விருந்தாகவும் சீர்திருத்த வாளாகவும் விளங்கி இருக்கின்றன. இவை இத்தனையும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்? "சேரமான் காதலி' என்ற சரித்திர நவீனமாக இருக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். இந்து மதத்தின் மகோன்னதத்தையும் இறை நம்பிக்கையின் வலுவையும் தான் இந்நாவலின்மூலம் கவிஞர் எவ்வளவு அழகாக ஆழமாக வடித்துக் காட்டியிருக்கிறார்!. வரலாற்று குறிப்புகளின் வழியை விட்டு நகராமல் ஆனால் அதேசமயத்தில் தமது கற்பனையையும் கருத்தாழம் மிக்க கவிதை நடையையும் குறைக்காமல் பக்குவமாகக் கலந்து, சுவைமிக்கதோர் சரித்திர நவீனமாக்கித் தந்திருக்கிறார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866