சேர மன்னர் வரலாறு

ஆசிரியர்: ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை

Category இலக்கியம்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaperback
Pages 350
Weight250 grams
₹65.00 ₹58.50    You Save ₹6
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Hereசங்கத் தொகைநூல் பலவற்றிற்கு உரைநயம் கண்ட உரவோர்: சைவசித்தாந்த வித்தகர்; சொற்பொருள் நயம் உரைத்த சான்றோர்; பேச்சாலும் எழுத்தாலும் பிறர் உள்ளம் கவர்ந்தவர்; தமிழர் வரலாற்றைத் தகவுடன் உரைத்தவர்; ஊர்களின் உண்மைப் பெயர்களைக் கண்டறிந்தவர், ஏடு படிப்பதிலும் கல்வெட்டு ஆராய்வதிலும் வல்லவர், தம் சொந்த முயற்சியாலும் கடும் உழைப்பாலும் உலகம் போற்ற வாழ்ந்தவர்; மாணவர்களின் உள்ளம் கொள்ளை கொண்டவர்; தாம் வாழ்ந்த காலத்திலேயே பேரும் புகழும் பெற்றவர். ஒளவை சு. துரைசாமி பிள்ளை , பல்வேறு பட்டங்கள் பெற்றவரேயாயினும் 'உரைவேந்தர்' என்பதே இறுதிவரை நிலைத்துள்ளது.

உலக வாழ்வு வளம் பெறுதற்கு அதன் தொன்மை வரலாறு இன்றியமையாதது. முன்னோர் வாழ்வில் காணப்படும் உயர்ச்சியும் வீழ்ச்சியும், ஆக்கமும் கேடும், நிறையும் குறையும் பின்னோர்க்கு ஆக்கமும் அரணுமாம். நம் நாட்டில் சங்க இலக்கியங்கட்குப்பின் தோன்றியவை யாவும் விண்ணவர் தேவர் அசுரர் வாழ்வையும் பெருமைகளையும் கற்பனையால் விரித்துக் கூறி, மண்ணவர் வாழ்வையும் வரலாற்றையும் அறவே புறகணித்து விட்டன. அதனால் நாம் வாழும் வீட்டைச் சுற்றிலுமுள்ள புல் பூடுகள், மரஞ் செடிகள், புழு பூச்சிகள், புள்ளினங்கள் முதலிய பலவற்றின் பெயர் கூடத் தெரியாமல் இருக்கிறோம். நமது குடும்ப வரலாறும், நாம் வாழும் ஊர் வரலாறு, நாட்டு வரலாறு ஒன்றும் நமக்குத் தெரியாது. தேவாசுரர், முகமதிய ஆங்கிலர் வரலாறுகள் ஓரளவு தெரியுமே தவிர, நம் முன்னோரான குடும்பத்தலைவர், அரசர், செல்வர், பெரியோர் வரலாறும் செயல்வகையும் அறியாமை தான் நமது சமுதாய பொருளாதாரச் சமய வீழ்ச்சிக்குக் காரணம். இவ் வரலாறுகளை வெளியிடும் நோக்கத்தால் இவ் வரலாற்று நூலை வெளியிடுகிறோம். இதனை இதுகாறும் ஆதரித்த அறிஞர் உலகம் தொடர்ந்து ஊக்கம் உறுவிக்கும் என நம்புகின்றோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை :

இலக்கியம் :

பூம்புகார் பதிப்பகம் :