சோழ குலாந்தகன்
ஆசிரியர்:
உதயணன்
விலை ரூ.260
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D?id=1004-4868-8622-0452
{1004-4868-8622-0452 [{புத்தகம் பற்றி விருந்து பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர் எழுந்த புதிய இலக்கிய வடிவங்களில் ஒன்றுதான் நவீனம் எனப்படும் நாவல். சமூகப் பண்பாட்டுக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுபவை சமூக நாவல்கள் எனப்படுகின்றன. சரித்திரச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கற்பனைப் புனைவுகளோடு எழுதப்படுபவை சரித்திர நாவல்கள் எனப்படுகின்றன. சரித்திரச் சான்றுகளுக்கிடையே விடுபட்ட பகுதியை இணைத்து முழுமைப்படுத்தும் பாங்கில் புனையப்படுபவை இவ்வகையில் அடங்குகின்றன. சோழநாட்டை ஆண்ட சோழர் வம்சத்தில் தோன்றிய கரிகாற் சோழன், இராஜேந்திர சோழன் எனப் பல சோழ மன்னர்களை நாம் அறிவோம். எனினும் அப் பரம்பரையில் வந்த ஏராளமான மன்னர்களின் பெயர்கள் இலைமறைக் காயாகவே காணப்படுகின்றன. அவர்களைப் பற்றிய வரலாறுகள் வெளிப்படுத்தப்படாமலேயே உள்ளன.
<br/> அப்படிப்பட்ட மன்னர்களுள் ஒருவன்தான் வீரராஜேந்திர சோழனின் மகனான அதிராஜேந்திர சோழன். இவனைப் பற்றிய சரியான பதிவுகள் கிடைக்கப்பெறவில்லை. எனினும் பில்கணரின் விக்கிரமாங்க தேவ சரித்திரம், நீலகண்டபிள்ளை, சதாசிவ பண்டாரத்தார் போன்ற சரித்திர ஆய்வாளர்களின் கருத்துகளை ஆய்வு செய்து சோழர்களின் சரித்திர நூல்களை அடிப்படையாகக் கொண்டு சோழ குலாந்தகன் என்னும் இந்நாவலை ஆசிரியர் எழுதியுள்ளார்.
<br/> இந்நாவலின் ஒவ்வோர் அத்தியாயத்தின் தொடக்கத்திலும் இலக்கியப் பாடல்கள், தமிழ், ஆங்கில அறிஞர்களின் கருத்துகள் ஆகியவற்றைத் தந்து கதை நிகழ்வு தொடங்குவதாக ஆசிரியர் காட்டியிருப்பது ஒரு புதிய நெறியாக உள்ளது. எனவே இந்நாவலைப் படிப்பதனால் பல இலக்கியங்களையும் தமிழ் மற்றும் ஆங்கில அறிஞர்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866