ஜிப்ஸியின் துயர நடனம்

ஆசிரியர்: யமுனா ராஜேந்திரன்

Category கட்டுரைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperBack
Pages 396
ISBN978-81-2343-256-4
Weight450 grams
₹325.00 ₹292.50    You Save ₹32
(10% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மார்க்சியத்தினால் உந்துதல் பெற்ற கலைஞர்கள் மற்றும் தத்துவவாதிகள் மீது சோவியத் யூனியனது வீழ்ச்சியையொட்டி உலக அளவிலான தாக்குதலை பின்நவீனத்துவவாதிகளும், தூய கலை இலக்கியவாதிகளும் முனைப்புடன் மேற்கொண்டிருந்த வேளையில், வரலாறு முழுக்கவுமான மார்க்சியர்களின் வீரஞ்செறிந்த போராட்டங்களும் தியாகங்களும் களங்கப்படுத்தப்பட்ட வேளையில், வரலாறு குறித்த மௌனங்களையும் ஞாபக மறதிகளின் இருண்ட வெளிகளையும் உடைக்கும் முகமாக எழுதப்பட்ட கட்டுரைகளும் பாசிசத்திற்கு எதிரான நிலைபாடு மேற்கொண்ட, மார்க்சியத்தினால் உந்துதல் பெற்ற கலைஞர்கள், சமவேளையில் ஸ்டாலினியம் குறித்துச் சிக்கலான அறவியல் நெருக்கடிகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள் எனும் வரலாற்றுப் புரிதலுடன். அத்தகைய கலைஞர்களின் சுயவிசாரணைகளையும் ஆன்ம தரிசனத்தையும் முன்வைக்கும் நோக்குடன் எழுதப்பட்ட கட்டுரைகளும், பாலியல் மீறல்களை முன்வைத்து மார்க்சியர்களின் வாழ்வும் அவர்தம் தத்துவப் பங்களிப்பும் மலினப்படுத்தப்பட்ட வேளையில், அடிப்படையில் மனிதஜீவிகளாக அவர்களை முன்னிறுத்தி எழுதப்பட்ட கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. ஒரு வகையில் சென்ற நூற்றாண்டின் மகத்தான மார்க்சிய கலை ஆளுமைகள் குறித்த ஒரு நினைவுகூரலாகவே யமுனா ராஜேந்திரனின் இந்நூல் உள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
யமுனா ராஜேந்திரன் :

கட்டுரைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :