ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு ( முதல் பகுதி )

ஆசிரியர்: மு மாதேஸ்வரன்

Category ஜோதிடம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 312
ISBN978-81-88796-58-5
Weight250 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நண்பர் ஒருவரால் திரு. மு. மாதேஸ்வரன் அவர்கள் ஒரு ஜோதிட ஆராய்ச்சியாளர் என்று எங்களிடம் அறிமுகப் படுத்தி வைக்கப்பட்டார். அவரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது, அவரிடம் அரிய விஷயங்கள் இருப்பதை அறிந்து கொண்டோம். பேச்சுவாக்கில் ஜோதிடர்களிடமும், ஜோதிடப் புத்தகங்களிலும் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளனவே என்று கேட்டபோது, மிக அருமையான உதாரணங்களுடன் விளக்கினார். அந்த விளக்கங்களைக் கேட்டபோது, அனைவருக்கும் பயன்படும் வகையிலும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் இவருடைய புத்தகத்தை வெளியிடலாமே என்ற யோசனை எங்களுக்கு ஏற்பட்டது. இவ்வெண்ணத்தை அவரிடம் தெரிவித்தபோது, அவர், தாம் இது பற்றிய யோசனையோடு பல விஷயங்களை ஆராய்ச்சியின் அடிப்படையில் திரட்டி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். அவை ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் தொழில்முறை ஜோதிடருக்கும் பயன்படும் என்று கூறி எங்கள் வேண்டுகோளுக்கிணங்க “ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு” என்ற பெயரில் இரண்டு பாகங்களாக எழுதியுள்ளார். அதை வெளியிட்டுள்ளோம். அரிய விஷயங்களை வெளிப்படையாக அனைவரும் எளிதில் புரிந்து கொள்ள ஏற்றதாக உள்ள இந்த இரு நூல்களையும் வாங்கிப் படித்து பயனடைய வேண்டுகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு மாதேஸ்வரன் :

ஜோதிடம் :

விஜயா பதிப்பகம் :