ஞானத்தின் ரசவாதம்
₹250.00 ₹237.50 (5% OFF)

ஞானத்தின் ரசவாதம்

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 184
ISBN978-81-8402-132-5
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நீ முதல் முறையாக மெளனமாகும் பொழுது உனது பழைய அனுபவத்திலிருந்து நீ உணரக்கூடியதெல்லாம் துயரம்தான்.அதை ஆழமாக அனுமதி கொடு. அதைத் துயரம் என்று முடிவு கட்டாதே. ஏனெனில் அந்த முடிவே ஒரு தடையாகிப் போகும். எதையாவது ஒன்றை எதிர்மறை என்று கூறும் பொழுதே நீ அதை விலக்க முயற்சிக்கிறாய். அதைப் பற்றி எதிர்மறையாக எதுவும் கூறாதே.அதை மௌனத்திற்கும் பாடலுக்கும் இடையேயுள்ள ஒரு பாலமாக ஏற்றுக் கொள்.சற்றே பொறுத்திரு, அதன் பின்னர் நீ இந்த மௌனம் செத்துப்போனது அல்ல. இது கல்லறையின் மௌனம் அல்ல என்பதைப் புரிந்து கொள்வாய்.இந்த மௌனம் உயிர்த்துடிப்புள்ளது. இது வெறுமையான மௌனம் அல்ல. அதிகமாக நிறைந்த மௌனம். நிறைந்து வழியும் மெளனம். எதனால் நிறைந்து வழிகிறது? மீண்டும் ஒரு புதிய அனுபவம் உனக்காகக் காத்திருக்கிறது. நீ வார்த்தைகளுடன் கூடிய பாடல்களை மட்டுமே அறிந்திருக்கிறாய். வார்த்தைகளற்ற ஒரு பரிசுத்தமான பாடலை, ஓசையற்ற ஒரு இசையை நீ எப்போதுமே அறிந்ததில்லை.சற்றே பொருத்திருந்தால் போதும், இந்தத் துயரம் வார்த்தைகளற்ற ஒரு பாடலாக, ஓசையற்ற இசையாக,அசைவுகளற்ற ஆடலாக மாறத்தொடங்கும்.எல்லாமே மிகச் சரியாகப் போய்க் கொண்டிருக்கிறது. கொஞ்சம் பொறுமை மட்டுமே தேவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கண்ணதாசன் பதிப்பகம் :