டாக்ஸி டிரைவர்

ஆசிரியர்: ஆனந்த் ராகவ்

Category கதைகள்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 120
ISBN978-93-86737-00-7
Weight150 grams
₹140.00 ₹126.00    You Save ₹14
(10% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழகத்தின் அனைத்து முன்னணி இதழ்களிலும் தடம் பதித்திருக்கிறார் ஆனந்த் ராகவ். இதுவரை அறுபது சிறுகதைகளும் ஏழு மேடை நாடகங்களும் எழுதியிருக்கிறார். சரித்திர ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இலக்கியச் சிந்தனை அமைப்பின் விருது பெற்றவர். இந்திய ராமாயணங்களோடு தாய்லாந்து மற்றும் இதர தென்கிழக்கு ஆசிய ராமாயணங்களை ஒப்பிட்டு எழுதிய 'ராமகியன்' என்கிற நூல் இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கது. தமிழிலும் ஆங்கிலத்திலும் நாடகங்களை எழுதி இயக்குகிறார். இவரது நாடகங்கள் நாற்பது முறை மேடையேற்றப்பட்டுள்ளன. சரளமான விறுவிறுப்பான நடை, இயல்பான நகைச்சுவை ததும்பும் மொழி, சட்டென்று திசைமாறும் முடிவு என்று தனக்கென்று ஒரு பிரத்யேக நடையழகை உருவாக்கிக் கொண்டவர். அவரது எழுத்தில் மிகை இல்லை. எளிமையே அழகு என்பதில் நம்பிக்கை கொண்டவர். ஆனந்தின் பார்வைத் துல்லியமும் எடுத்துக்கொள்ளும் கோணங்களும் அபூர்வமானவை. லயிப்புடன் ஊன்றி வாசிக்கச் செய்பவை.
மோசமான நாட்டில், மோசமான மக்கள் நிறைந்த நகரங்களில் வாழும் மக்கள், பிற நாடுகளில் டாக்ஸிக்காரர்கள் நியாயமாக இருக்கமாட்டார்கள் என்று நம்புவதை அற்புதமாக படம் பிடித்துள்ளார் ஆனந்த் ராகவ். உரையாடல்கள் வெகு இயல்பாய், வெகு அழகாய் அமைத்துள்ளன. கதை முடிந்த பிறகும் நம் மனதில் தொடர்கிறது. இலக்கியச் சிந்தனையின் ஜூலை 2004 மாதத்து சிறந்த கதையாக 'டாக்ஸி டிரைவர்' கதையைத் தேர்வு செய்கிறேன்.

-பத்ரி சேஷாத்ரி.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆனந்த் ராகவ் :

கதைகள் :

கிழக்கு பதிப்பகம் :