டாலர் தேசம்

ஆசிரியர்: பா ராகவன்

Category நாவல்கள்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 784
ISBN978-81-8368-000-4
Weight800 grams
₹1000.00 ₹950.00    You Save ₹50
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பின்லேடன் குறித்தும் நமது பார்வை என்ன, பாகிஸ்தானின் பார்வை கண்ண, அமெரிக்காவின் கருத்து என்ன என்பது நமக்குத் தெரியும். இதே விஷயத்தை சூடான் எப்படிப் பார்த்தது, போஸ்னியா எப்படிப் பார்த்தது, பாலஸ்தீன் எப்படிப் பார்த்தது, நிகரகுவா எப்படிப் பார்த்தது என்று யாருக் காவது தெரியுமா? பெரும்பாலானவர்களுக்கு சாத்தானாகக் காட்சியளிக்கும் பின்லேடன், சிலருக்குக் கடவுளாகவும் தெரிகிறவர் என்பதை நம்பித்தான் ஆகவேண்டும். நியாயங்களும் நாணயம் மாதிரிதான். இரண்டு பக்கங்கள் வாய் போதும் இருக்கவே செய்கிறது. தவறவிடாமல் இரு பக்கத்தையும் கட்டிக்காட்டுவதுதான் ஒரு யோக்கியமான சரித்திர ஆசிரியனின் கடமையாக இருக்க முடியும். சரித்திரம் என்பது விஞ்ஞானமோ, கணிதமோ இல்லை. இதில் தீர்வுகள் சாத்தியமில்லை. உள்ளதை உள்ளபடி எடுத்துக்காட்டுவதே ஒரு நேர்மையான சரித்திர நூலின் ஆகப்பெரிய நோக்கமாக இருக்கமுடியும் என்று கருதுகிறேன். இந்நூலில் நான் முயற்சி செய்திருப்பதும் அதனைத்தான்.
ஓராண்டு காலத்துக்கு மேலாக இது குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழில் தொடராக வெளிவந்தது. வெளியான காலத்தில் நான் சற்றும் எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் இத்தொடர் பற்றிய விசாரணைகளும் பாராட்டுதல்களும் எனக்கு வந்துகொண்டே இருந்தன. பலபேர் விரும்பிப்படிக்கிற வகையில் ஒரு மாபெரும் தேசத்தின் சரித்திரத்தைத் தரமுடிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. வாய்ப்பளித்த குமுதம் நிறுவனத்துக்கும் வாசிக்கிற உங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா ராகவன் :

நாவல்கள் :

கிழக்கு பதிப்பகம் :