டேவிட் லிவிங்ஸ்டன்

ஆசிரியர்: பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
Format Paperback
Pages 76
Weight100 grams
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



லிவிங்ஸ்டனின் நடுவுநிலை உணர்வு வியக்கத்தக்கதாகும். இவர் தாம் என்றும் நேர்மையுடையவர் ஆயினும், பிறர் நேர்மை தவறியவிடத்தும் நடுவுநிலைமை நீங்கிச் செயலாற்றுவதில்லை. இவருடைய அராபிய நண்பர், இவருக்குமாறாக நடந்து படுகொலைகள் செய்தபோதும் தாக்கப்பட்டவர்க்குத் தாக்குதலின் பின் உதவினரேயன்றி அவர்களுக்காகக் கூடச் சண்டையில் கலக்கவில்லை. அராபியர் பிழையுணர்ந்து பிழை பொறுக்கவேண்டியபோது, 'யானே பிழைகள் நிறைந்தவன்' என்று கூறினார் என்றால், இவருடைய முழு அருள் நிலையின் திறத்தை என்னென்று கூறுவது! துறவு வாழ்க்கை
தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராகிய லிவிங்ஸ்டன் வாழ்க்கை, உண்மைத் துறவு வாழ்க்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். 'சிலுவையைத் தாங்கி நட' என்ற இயேசு பெருமானின் விவிலிய உரையைச் சிலர் 'சிலுவைக் குறி தாங்கி நட' என்று கொள்ளுவர். ஆனால் அவர் தியாகவாழ்வை ஏற்று நட' என்று கொண்டார். ஆணவம், காமியம், மாயை 'தற்பெருமை, தன்னலம், பொருட்பற்று ஆகிய மும்மலங்களும் (குற்றங்களும் ) அறுத்த நீற்றுக்கு அறிகுறி நீறு என உணராது புறநீறுமட்டும் அணிந்து தருக்குபவர் உண்டு. உண்மைத்துறவு புறவேடமன்று. புறவேடத்துடன் அதன் உட்பொருளாகிய தன்னலத் தியாகமும் பொதுநல தொண்டுமே என்பதை லிவிங்ஸ்டன் வாழ்வு எடுத்துக்காட்டுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :