தசாவதாரம்
ஆசிரியர்:
அறிஞர் அண்ணா
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?id=1069-4299-5000-0255
{1069-4299-5000-0255 [{புத்தகம் பற்றி
<br/>'பணம் வாழ்க்கைக்கு ஒரு கருவியேயொழிய அதனைப் பிரேமைக்குரிய பொருளாகக் கொள்ளுதல் கூடாது; பணப்பித்தம் கூடாது; வெறும் அலங்காரங் களுக்கும் ஆடம்பரத்துக்கும் பணம் தேடிக் கொண்டு கிடப்பவனின் வாழ்வு, பாழ்படும். பணம் பணமென்று பிணமாகும்வரை அவன் அலைந்து திரியவேண்டிய வனாவானேயொழிய வாழ்க்கையிலே இன்பம் காணமாட்டான்' என்றெல்லாம் என்னிடம் பேசுவாரே, அவரா இந்தப் பாழும் பணத்தாசை கொண்டார்? செச்சே! நான் ஓர் துஷ்டை! காக்காய் உட்கார்ந்தது பனம்பழம் விழுந்தது என்பது போல, இந்தப் பதக்கம் இங்கே இருப்பதாலேயே, அவர் களவாடினார், கோயில் கொள்ளையிலே சம்பந்தப்பட்டார் என்று எண்ணவும் தொடங்கினே எவ்வளவு இழி குணம் எனக்கு? அவராவது, இந்த அற்பப் பணத்துக்காக, அக்ரமத்திலே ஈடுபடுவதாவது! பதக்கம் அவரிடம் வேறு யாராவது தந்திருக்கக் கூடாதா என்ன? மேலும், இது கோயில் பதக்கம் என்று ஏன் கூற வேண்டும்? எவனோ வழிப்போக்கன் சொன்ன வார்த்தை வேதமா? வேதமே பொய் என்பர் என் நாதன்!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866