தஞ்சைவாணன் கோவை

ஆசிரியர்: கதிர் முருகு மொழிபெயர்ப்பு: 1621

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper Back
Pages 184
ISBN978-93-80220-17-8
Weight200 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866காலந்தோறும் தன்னில் எண்ணற்ற இலக்கிய வகைகளைப் படைத்துக் கொடுத்த தண்ணிய மொழி தமிழ். தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலங்களுள் தன்னிகரற்ற இலக்கியங்களைப் படைத்துக் கொடுத்த காலமாகச் சிற்றிலக்கியக் காலம் திகழ்கிறது. இக்காலத்தில் படைக்கப்பட்ட இலக்கியங்களின் எண்ணிக்கை யைக் கொண்டு சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறு என்னும் வழக்கு ஏற்பட்டது. சிற்றிலயக்கியக் காலத்தில் பல்வேறு இலக்கிய வகைகள் படைக்கப்படினும், பரணி, உலா, பிள்ளைத் தமிழ், கோவை, அந்தாதி, உலா, தூது கோவை முதலான சில இலக்கிய வகைகளே செல்வாக்குடன் விளங்கிக் கொண்டிருக்கின்றன.
சிற்றிலக்கிய வகைகளுள் அகப்பொருள் துறைகளை விரித்துக் கூறும் பான்மையில் அமைந்து சிறப்பது கோவை இலக்கிய வகையாகும். கோவை இலக்கியங்களுள் திருக் கோவையார், பாண்டிக் கோவை, அம்பிகாபதிக் கோவை, திருவெங்கைக்கோவை, கோடீசுவரக் கோவை முதலியன செல்வாக்குடையனவாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கதிர் முருகு :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :