தஞ்சை நாட்டுப்புறப் பாடல்கள்

ஆசிரியர்: வாய்மைநாதன்

Category நாட்டுப்புறவியல்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatHardbound
Pages 288
ISBN978-93-80218-18-2
Weight300 grams
₹125.00 ₹118.75    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஊர்ப்புற மக்களின் தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் குறிப்பிட்ட வரையறைக்குட்படாதவை. மரம், கல், இரும்பு, புதர், புற்று, திசை முதலிய எல்லாவற்றிலும் அவர்களது தெய்வ நம்பிக்கை பரவியிருந்தது. அவர்கள் தம் முன்னோர் புகழை நினைவிற்கொண்டு வழிபட்டார்கள்; மாரியம்மன், பிடாரி, வீரன், சாம்பான் முதலான சிறு தெய்வங்களைக் கொண்டாடினார்கள்; அவர்களுக்கு அவ்வப்போது உவப்பான பொருள்களை அவற்றின் முன் படையலாய் வைத்தார்கள். உணவு, இறைச்சி, கள், சுருட்டு என்று அவை விதம் விதமாய் வேறுபடும். இவ்வழிபாடு வைதீக நெறியினால் மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் அந்த மக்கள் முதலில் மிரண்டனர்; காலப்போக்கில் அதனுடன் சேர்ந்துகொண்டார்கள்; மாதா, ஏசு, நாகூர் ஆண்டவர் ஆகிய பிற சமயக் கடவுளரையும் அதே பணிவு பக்தியுடன் வழிபட்டார்கள்; புத்தர், சமணர் சிலைகளையும் அவ்வாறே கொண்டாடினார்கள்; மாரி அம்மைக்கும், காளி வாந்தி பேதிக்கும் அதிகாரம் படைத்த தேவதைகள் என்று நம்பினார்கள்; மழையையும் தீயையும் இடி மின்னலையும் அவர்கள் தெய்வப் பெயர் கொடுத்து வழிபட்டார்கள்; நாகப் பாம்பையும் அது அடங்கும் புற்றையும் தொழுதார்கள். புற்றடி மாரியம்மன் குறைந்த காலத்தில் நிறைய அடியார்களை ஈர்த்த தேவதை. இவற்றை வணங்குவதில் அவர்கள் விருப்பு வெறுப்பற்ற சமரசம் காட்டினர்; இத்தெய்வங்கள் மீது பாடல்களை இசையோடு பாடினர்; சில இசைக் கருவிகளைப் பயன்படுத்தினர். உடுக்கை என்ற தோற் கருவி எளிதில் பூசாரிகள் கையில் ஓசை எழுப்பத் தொடங்கியது. இவர்கள் சிறு தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டார்கள்...

உங்கள் கருத்துக்களை பகிர :
வாய்மைநாதன் :

நாட்டுப்புறவியல் :

கௌரா பதிப்பக குழுமம் :