தண்ணியா செலவழிக்கலாம் பணத்தை!

ஆசிரியர்: ஆர்.பத்மநாபன்

Category தத்துவம்
Publication சூரியன் பதிப்பகம்
FormatPaper back
Pages 95
ISBN978-93-85118-05-0
Weight150 grams
₹75.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நேற்றைய ஆடம்பரம், இன்றைய அத்தியாவசியம். எது இல்லாமல் நம்மால் வாழ முடிகிறது? எல்லாம் வேண்டும். நினைத்த மாத்திரத்தில் கையில் இருந்தாக வேண்டும். ஆனால் அதற்குப் பணம்?சந்தையில் வந்து குவியும் நவீன பொருள்களுக்கு ஏற்ற மாதிரி நம் தேவைகளும் வேக வேகமாகப் பெருகிக் கொண்டிருக்கின்றன. கையில் பணம் இல்லையா? பர்சனல் லோன் அள்ளித் தர ஆயிரம் பேர் தயார்! இருக்கவே இருக்கிறது கிரெடிட் கார்ட். உள்ளங்கை குட்டிச்சாத்தான். பிரச்னை எங்கே தொடங்குகிறது தெரியுமா? பட்ஜெட்டில் துண்டு விழும்போது, மேலும் மேலும் கடன் வாங்கி விழி பிதுங்கும்போது...எப்படித் தீர்க்கலாம் இந்தச் சிக்கலை?சிக்கனமாக இருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. ‘‘ப்பூ! இது ஒரு பதிலா’’ என்று உடனே உள்ளுக்குள் ஒரு குரல் கேட்டால், அடக்கி மிரட்டி உட்கார வையுங்கள். சிக்கனமாக இருப்பது ஒரு கலை. ஒரு தொழில்நுட்பமும் கூட. கவனமாக இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் உங்களுக்கே தெரியாமல் உங்கள் பர்ஸ் குண்டாகும்! உங்கள் வீட்டு பீரோக்களையும் பிதுங்க வைக்கலாம். உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, வசதிகளைக் கொண்டு வந்து சேர்க்கப் போகிற வைர சூத்திரங்கள் அடங்கிய புதையல் இது. அப்புறம் ஏன் ‘தண்ணியா செலவழிக்கலாம் பணத்தை’ என தலைப்பு? சந்தேகமில்லை. உலகமே தண்ணீர்ப் பஞ்சத்தில் தவிக்கும் இந்தக் காலத்தில் பணத்தையும் தண்ணீரைப் போல் சிக்கனமாகத்தான் பயன்படுத்தியாக வேண்டும். ஆ, அது ரொம்பக் கஷ்டம் என்கிறீர்களா? ம்ஹும்! மிகவும் சுலபம்.இந்த நூலில் சில ஃபார்முலாக்கள் இருக்கின்றன. உங்கள் பணம் உங்களுக்கே தெரியாமல் கரைந்து போவதைத் தடுக்கிற ஃபார்முலாக்கள். படித்துப் பாருங்கள்... பிரமித்துப் போவீர்கள்!.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.பத்மநாபன் :

தத்துவம் :

சூரியன் பதிப்பகம் :