தந்திரா கூறும் உடல் - உன்னத வாழ்வியல் இரகசியங்கள்

ஆசிரியர்: எஸ். குருபாதம்

Category மனோதத்துவம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 228
Weight300 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எஸ். குருபாதம் அவர்கள் எழுதிய 'தந்திரா கூறும் உடல் - உன்னத வாழ்வியல் இரகசியங்கள்' என்ற அரிய இந்நூலுக்கு அணிந்துரை வரையும் வாய்ப்புக் கிடைத்தமை யிட்டு மகிழ்வெய்துகிறேன். மூன்று பகுதிகளையும், 25 பிரிவுகளையும் கொண்ட இந்நூலில் தந்திரா கூறும் விடயங்களில் - குறிப்பாக உடல் - மனம் சம்பந்தப்பட்ட கருத்துக்கள் தற்காலத்துக்கு உபயோகம் தரும் வகையில் சுருக்கமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. கருத்துக்களை தெளிவாகவும், கச்சிதமாகவும் தருகின்ற இந்நூலாசிரியரின் பாங்கு பாராட்டுதற்குரிதாயுள்ளது.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதோர், வாழ்க்கை நெறியைக் கற்பிக்கும் தந்திரா ஒரு வரலாற்று நூல் என வரலாற்று ஆசான்கள் கண்டுகொண்டுள்ளார்கள். காலவோட்டத்தில் இவ் ஏற்பாடு தொடர்பான நூல்கள் அழிபட்டுப் போயின என்கிற செய்தி அறிவார்வலருக்கு ஒரு துன்பியல் நிகழ்வு எனினும், பொதுவாக தென்னாசிய சிந்தனை மரபில் தோன்றிய சமய மெய்யியல்கள் பலவற்றில் தந்திராவின் கருத்தியல் தாக்கத்தினை இன்றும் உணரக் கூடியதாயுள்ளது. 'இயற்கையோடு இசைந்து இயல்பாய் இரு' என்கிற தாந்திரத் தத்துவத்தின் உயர் நாட்டம், இன்று பலவாய் உலக சிந்தனை ஓட்டங்களில் முதலிடம் வகிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மனோதத்துவம் :

மணிமேகலைப் பிரசுரம் :